NATIONAL

குடிநீர் நெருக்கடி: அஸ்மின், ஜைனியை பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு சவால் !!!

எரிபொருள், பசுமை தொழில் நுட்பம் மற்றும் நீர் வளங்கள் அமைச்சின்  தலைமை செயலாளர் டத்தோ டாக்டர் ஜைனி ஊஜாங்கை மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் குடிநீர் விநியோகச் சேவையை அரசியல் ஆக்கினால் எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார் சவால் விடுத்தார். பொதுச் சேவை ஊழியரான ஜைனி சரியான தகவல்களை வழங்க வேண்டும். இதை விடுத்து அரசியல் சித்து விளையாட்டுகளை குடிநீர் விநியோகச் சேவையில் காட்ட வேண்டாம் என்று அஸ்மின்  அறிவுறுத்தினார்.

”  சிலாங்கூர் மாநில குடிநீர் சேமிப்பு 0% உள்ளது என்று அமைச்சின் தலைமை செயலாளர் என்னை தாக்குதல் நடத்தி உள்ளார். அப்படி அரசியலில் விருப்பம் இருந்தால், அரசாங்க பதவியை ராஜினாமா செய்து விட்டு என்னுடன் கோம்பாக் அல்லது புக்கிட் அந்தாராபங்சா தொகுதியில் போட்டியிடலாம். இதன் மூலம், மக்கள் தப்பு செய்தவர்களை தண்டிப்பார்கள். அமைச்சு அல்லது நான் தவறு செய்திருந்தால் கண்டிப்பாக தண்டனை கொடுப்பார்கள்,” என்று மெலாவாத்தி அரங்கத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது மேற்கண்டவாறு தெரிவித்தார்.


Pengarang :