SELANGORUncategorized @ta

குடிநீர் விநியோகம் 91.7% மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பியது !!!

ஷா ஆலாம், மார்ச் 11:

இன்று காலை வரை தடைப்பட்ட குடிநீர் விநியோகம் 91.7% மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பியதாக சிலாங்கூர் குடிநீர் விநியோக நிறுவனம் (ஷாபாஸ்) அறிக்கை வெளியிட்டது. உலு சிலாங்கூர் மற்றும் கோலா லங்காட் மாவட்டம் 100% மீீீீண்டும் விநியோகத்தை பெற்றுள்ளது.

மேலும் கிள்ளான் (97.3%), கோலா லம்பூர் (96.8%), கோம்பாக் (91.9%) மற்றும் பெட்டாலிங் (74.5%) போன்ற மாவட்டங்களிலும் வழக்க நிலைக்கு திரும்பியதாக ஷாபாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தாமான் பூச்சோங் பெர்டானா, தாமான் பூச்சோங் இண்டா, தாமான் இம்பியான் இண்டா, பிங்கீரான் புக்கிட் ஜாலில், தாமான் அமான் சாரி, தாமான் கியாரா, சுபாங் ஜெயா, எஸ்எஸ்12-எஸ்எஸ்19, ஹாயாட் சைவுஜானா, தெமாசா கிளன்மேரி, ஹாகோம் கிளன்மேரி, தாமான் தெனாகா மற்றும் புக்கிட் கூச்சாய் போன்ற இடங்களில் கட்டம் கட்டமாக விநியோகம் கிடைக்கும் என்று ஷாபாஸ் விவரித்துள்ளது.

 

 

 

 

 

பயனீட்டாளர்கள் அவசர குடிநீர் சேவைக்கு எஸ்எம்எஸ் மூலமாக எண் 15300 (Tanker<jarak>Nama & Alamat)


Pengarang :