SELANGOR

குடிநீர் விவகாரம்: நஜீப் தீய எண்ணத்தைக் கொண்டவர் – அஸ்மின்

அம்பாங், மார்ச் 10:

14-வது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நாட்டின் தலைமைத்துவத்தில் இருக்கும் பிரதமர் அரசியல் இலாபத்திற்காக தீய எண்ணத்துடன் குடிநீர் விவகாரத்தில் அவதூறுகளையும் பொய் தகவல்களையும் அள்ளி வீசி உள்ளார் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். சிலாங்கூர் மாநில அரசாங்கம், ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வழி சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு (ஸ்பலாஷ்) உதவிகள் செய்து பழுது பார்க்கும் பணிகள் விரைவு படுத்த பாடுபட்டதை மறுக்க முடியாது. ஸ்பலாஷ் நிறுவனத்தின் பணிகள் மாநில அரசாங்கத்தின் கீழ் இல்லை என்பதை அனைவரும்  புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் கூறுகையில், மாநில அரசாங்கம் பழுது பார்க்கும் பணிகளின் மொத்த செலவுகளையும் எடுத்துக் கொண்டது மட்டுமில்லாமல் திறன்மிக்க குத்தகையாளரை ஸ்பலாஷ் நிறுவனத்திற்கு உதவி செய்ய நியமிக்கப்பட்டுள்ளது என்று விவரித்தார்.

 

 

 

 

 

”  ஸ்பலாஷ் நிறுவனம் நமது சொத்து கிடையாது. நஜீப்புக்கு சொந்தமான வீட்டிற்கு உள்ளே எப்படி நுழைவது? இந்த வேலைகள் ஸ்பலாஷ் நிறுவனத்தைச் சார்ந்தது. அடிப்படையான விஷயம் கூட தெரியாமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும், ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வழி ஸ்பலாஷ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி உதவிகள் வழங்கப்பட்டது மட்டுமில்லாமல் மொத்த செலவுகளையும் மாநில அரசாங்கம் எடுத்துக் கொண்டது,” என்று கெடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

#தமிழ் பிரியன்


Pengarang :