SELANGOR

சிலாங்கூரில் கைவிடப்பட்ட 53 வீடமைப்புத் திட்டங்களுக்கு தீர்வு

ஷா ஆலாம், மார்ச் 28:

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சிலாங்கூரில் சுமார் 53 கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களை மாநில அரசாங்கம் விவேகமான கையாண்டு தீர்வினை ஏற்படுத்தியுள்ளது.இந்த 53 வீடமைப்புத் திட்டங்கள் 24,660 வீடுகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களை மேற்கொண்ட நிறுவனங்களை அடையாளம் கண்டு அதற்கு எதிராக மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதோடு சம்மதப்பட்ட நிறுவனங்களின் பெயர்களையும் கருப்பு பட்டியல் இட்டு மாநிலத்தின் அனைத்து ஊராட்சி மன்றங்களுக்கு அனுப்பி விட்டதாக வீடமைப்பு,கட்டடம் மற்றும் நகர்புற நலவாழ்வு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஸ்கண்டார் தெரிவித்தார்.

அடையாளம் காணப்பட்டு கருப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட எந்தவொரு வீடமைப்பு நிறுவனமும் சிலாங்கூரில் எந்தவொரு மேம்பாட்டுப் பணியினையும் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார் என்றார்.மேலும்,எந்தவொரு நிலையிலும் சூழலிலும் அவர்களுக்கு சிலாங்கூரில் இனி வாய்ப்புகள் வழங்கப்படாது என்றும் உறுதியாக கூறினார்.

முன்னதாக சிலாங்கூரில் கடந்த 2008ஆம் ஆண்டு டிசம்பரின் கணக்கியல்படி மொத்தம் 116 வீடமைப்புத் திட்டங்கள் கைவிடப்பட்டிருந்ததாகவும் அவை 42,541 வீடுகளை கொண்டிருந்ததாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 


Pengarang :