RENCANA PILIHANSELANGOR

செம்மண் தோட்டத்தில் தமிழ் மணம் பரப்பும் சங்காட் ஆசா தோட்டத் தமிழ்ப்பள்ளி

எத்தனையோ தோட்டங்களில் தமிழ்ப்பள்ளிகள் தத்தம் தமிழ் பணியை முடிவிற்கு கொண்டு வந்துவிட்ட நிலையிலும் சுதந்திரத்திற்கு முன்னர் உருவாக்கப்பட்ட சங்காட் ஆசா தோட்டத் தமிழ்ப்பள்ளி இன்னமும் செம்மண் தோட்டத்தில் தமிழ் மணம் பரப்பும் தன் தமிழ்ப்பணியினை செம்மையாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தோட்டத்தில் தமிழ் மணம் மட்டுமின்றி இன்னமும் நம் இனத்தின் பெருமை சொல்லும் வரலாற்று சான்றாகவும் சங்காட் ஆசா தோட்டத் தமிழ்ப்பள்ளி இவ்வட்டாரத்தில் பெருமிதமாக காட்சியளிக்கிறது. தோட்டத்தில் நம்மவர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் மாணவர்கள் எண்ணிக்கை இப்பள்ளியில் நிறைவு அளிக்கும் வகையில்தான் உள்ளது.

சங்காட் ஆசா தோட்டத்தின் மாணவர்களோடு அதன் சுற்றுவட்டார
மாணவர்களும் இப்பள்ளியில் தங்களின் கல்வி பயணத்தை தொடர்ந்துள்ள நிலையில் கல்வியிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும் மற்ற பள்ளிகளுக்கு சவலாக திகழ்ந்து சாதனைகளை குவிக்கும் தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றாக சங்காட் ஆசா தோட்டத் தமிழ்ப்பள்ளி தொடர்ந்து பீடுநடை போடுகிறது.

தோட்டங்கள் தொலைந்து போகலாம், இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்து போகலாம். ஆனால், இத்தோட்டத்தில் இந்தியர்கள் வாழ்ந்தோம் என்பதற்கு அடையாளமாக சங்காட் ஆசா தமிழ்ப்பள்ளி இன்னும் நூறாண்டுகளை கடந்தாலும் தமிழ் மணம் வீசி நம் வரலாற்று பெருமையை தாங்கிதான் நிற்கும் என்பதில் நாம் பெருமைக்கொள்ளதான் வேண்டும்.


Pengarang :