NATIONAL

ஜிஎஸ்டியை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் பிரதமரின் செயலை ஆட்சிக் குழு உறுப்பினர் கண்டனம் !!!

ஷா ஆலாம், மார்ச் 12:

நாட்டில் நிலவும் வறுமை நிலையை மற்றும் வாழ்க்கை செலவினங்களை குறைக்க வழிகள் ஆராயாமல் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் மற்ற நாடுகளுடன் பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதத்தை ஒப்பிடும் நடவடிக்கையை சிலாங்கூர் மாநில வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும் நகர நல்வாழ்வு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஸ்கண்டர் அப்துல் சமாட் கேள்வி எழுப்பினார். நாட்டின் தலைமைத்துவத்தில் முன்னோடியாக திகழும் பிரதமரின் செயல் கண்டிக்கத்தக்கது என்றார். பொறுப்பற்ற முறையிலும் ஜிஎஸ்டி வரியினால் மக்கள் படும் இன்னல்களை தீர்க்கும் வழிகளை தேடாமல் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் நடவடிக்கை வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

”  மற்ற நாடுகளுடன் ஜிஎஸ்டி வரி விகிதத்தை ஒப்பிடுவதை நிறுத்தி, இந்த வரியினால் குறைந்த மட்டும் நடுத்தர வருமானம் ஈட்டும் மக்கள் பல்வேறு வாழ்வியல் துன்பங்களை அனுபவித்து வருவதை சீர்தூக்கி பார்க்க வேண்டும். ஒப்பீடு செய்து மார்தட்டிக் கொள்ளும் செயலை விட மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை களைய வழி தேட முயற்சி எடுக்க வேண்டும்,” என்று தமது அறிக்கையில் இஸ்கண்டர்  குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

இதற்கு முன்பு, நஜீப் ஜிஎஸ்டி வரி அகற்றப்பட்டால் நாடு ரிம 45 பில்லியன் நிதிச்சுமையை எதிர் நோக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#தமிழ் பிரியன்


Pengarang :