SELANGOR

டரோயா: கைத்தொழிலை கற்றுக்கொள்வதால் பெண்களின் முன்னேற்றம் மேன்மை காணும்

ஷா ஆலாம், மார்ச் 7:

கைத்தொழில் ஒன்றினை கற்றுக்கொள்வதால் பெண்களின் முன்னேற்றம் மேன்மை காணும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர் டாக்டர் டாரோயா அல்வி தெரிவித்தார். ஒரு குடும்பத்தின் மொத்த வருமானம் குறைந்தது ஐயாயிரம் வெள்ளிக்கு மேல் இருக்க வேண்டும் என்று இன்றைய பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.ஒரு குடும்பத்தில் இருவர் வேலை செய்தாலும் அவர்களின் வருமானம் ஐயாயிரத்தை தொடக்கூடவில்லை என்பதே உண்மை.

இதனை கருத்தில் கொண்டே சிலாங்கூர் மாநில அரசு பெண்களுக்கான சுய தொழில் கற்று கொள்ள தேவையான உதவிகளையும் ஏற்பாட்டினையும் செய்து வருகின்றது.
இன்றைய சவால் மிக்க பொருளாதார நிலையில் பெண்களின் பங்கு அதிகமாக குடும்பத்திற்கு தேவைப்படுகின்றது. வீட்டில் இருந்து பிள்ளைகளையும் குடும்பத்தையும் வழி நடத்தும் பெண்களாக இருந்தாலும் அல்லது வேலை சென்று குடும்பத்தை பராமரிப்பவராக இருந்தாலும் ஏதேனும் ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் எதிர்கால பொருளாதார தேவைக்கு அது உதவியாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துடன் இத்தகைய கைத்தொழில் கற்றுக்கொள்வதால் முதலீடும் குறைவாக இருப்பதுடன் அதன் இலாபமும் இரண்டு மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

அண்மையில்  காப்பாரில் நடைப்பெற்ற பெண்களுகான அணிகலன்கள் தயாரிக்கும் பட்டறையை தொடக்கி வைத்த அவர் மாநில முழுவதும் பெண்கள் சுய முன்னேற்ற தொழில் கற்றுக்கொள்ளும் பட்டறைகளை தொடர்ந்து நடத்தி வருவதாகவும் இதனால் ஆண்டுக்கு ஏறக்குறைய 700 முதல் 800 பேர் வரை இத்தகைய பயிற்சியை முடித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

#வேந்தன்


Pengarang :