SELANGOR

டரோயா: சிலாங்கூர் மக்களின் ஆரோக்கியதிற்கு முதன்மை அளிக்கிறது மாநில அரசு !!!

ஷா ஆலாம், மார்ச் 4:

சிலாங்கூர் மக்களின் ஆரோக்கியதிற்கு முதன்மை அளிக்கிறது சிலாங்கூர் மாநில அரசு என்று சிலாங்கூர் மாநில சுகாதாரம் சார்ந்த ஆட்சி குழு உறுப்பினர் டாரோயா அல்வி தெரிவித்தார்.
மக்களின் ஆரோக்கியதிற்கும் அவர்களின் வாழ்வுக்கும் முதன்மை பங்கினை ஆற்றிவரும் மாநில மந்திரி பெசார் முகமட்  அஸ்மின் அலியின் ஆட்சி முறையால் பல பேர் நன்மையடைந்து வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


சிலாங்கூர் மாநில அரசு அமல்படுத்தி வரும் பல திட்டங்களில் ஆரோக்கியதிற்கு அதிக முக்கியதுவம் தந்தும் வருகின்றது.குறிப்பாக சிலாங்கூர் மக்களுக்கு சிறுநீரக சுத்தரப்பு ,பெண்களுகான மார்ப்பக புற்று நோய்கான பரிசோதனைகள் வறுமானம் குறைவாக பெறும் குடும்பங்களுக்கு என்று பெடுலி சேேஹாட் அட்டை என்று பல திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்துள்ளது. அதில் இருதய அறுவை சிகிச்சைக்காக 10 கோடி வெள்ளி ஒதுக்க்கி உயர்தர சிகிச்சைகாக மாநில அரசு செலவும் செய்து வருகின்றது.

தேசிய இருதய மருத்துவமையின் மூலமாக இத்தகைய தரமான மருத்துவத்தை சிலாங்கூர் மக்களுகாக மாநில அரசு செய்து வருவதுடன் இது வரை 500க்கும் மேற்பட்டவர்கள் இத்தகைய திட்டத்தினால் பயன் அடைந்து வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அதேப்போல் கேன்சர் நோயாளிகளுக்கும் மனோவியல் சார்ந்த நோயாளிக்ளுக்கும் மாநில அரசு அதிகமான முக்கியதுவத்தை கொடுத்தும் வருகின்றது என்றும்,ஆரோக்கியம் சார்ந்த தெளிவுகள் மாநில அரசின் உதவிகள் வேண்டும் என்பவர்கள் தன் அலுவலகத்தில் வந்து சந்திக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

தேசிய இருதய மருத்துவமனையில் நடைப்பெற்ற சிலாங்கூர் மக்களுக்கான இலவச இருதய சிகிச்சை நிகழ்ச்சியை சிலாங்கூர் மாநில முதல்வர் அஸ்மின் அலியுடன் இணைந்து தொடக்கி வைத்தப்பிறகு செய்தியாளர்கள் இடத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

#வேந்தன்


Pengarang :