SELANGOR

டாக்டர் டரோயாவுடன் சிலாங்கூர் இன்று ஒரு சிறப்பு நேர்காணல் !!!

சிலாங்கூர் மாநிலத்தில் அதிகமான இந்தியர்கள் வசிக்கும் பகுதியாக விளங்கிடும் பகுதிகள் ஒன்று காப்பாராகும். காப்பார் முன்பு தோட்டங்களின் மண்வாசனையால் இந்தியர்களின் வரலாற்றை பலவற்றை சுமந்து இன்று தோட்ட சூழ்நிலை மறைந்து பட்டணமாக மாறி இருக்கும் இப்பகுதி இன்று செமந்தா சட்டமன்ற தொகுதியாகவும் மாறி நிற்கின்றது.

மூவின இனத்தவர்களை கொன்ட தொகுதியாக இது இருந்தாலும் அதிகமாக வசிப்பது இந்தியர்களே. தோட்டங்களில் இருந்து வெளியேறியவர்கள் புதியதாக உருவாக்கப்பட்ட வீடமைப்புகளில் வீடுகளை வாக்கி கொண்டும் வாடகைக்கும் குடியேறி சில வருடங்கள் ஓடி விட்டாலும் இன்னமும் அந்த தோட்ட கலாச்சார பாணி அவ்வப்போது அங்கு காண முடிகின்றது. பெருவிழாக்கள், ஆலய திருவிழாக்கள் என்று பலவற்றை குறிப்பிட்டும் சொல்லலாம்.

அப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினரிகளில் ஒருவரான டாக்டர் டரோயா அல்விஸ் செமந்தா சட்டமன்றத்தில் கடந்த பொது தேர்தலின் போது வேட்பாளராக களம் இறங்கப்பட்டார்.அவரை எதிர்த்து போட்டிட்ட தேசிய முன்னனி வேட்பாளரை வெற்றி கண்டார்.
கடந்த ஐந்து வருடங்களாக அவர் கடந்து வந்த பாதைகளையும், சவால்மிக்க தருனங்களையும், அவர் மக்களுக்கு ஆற்றிய சேவைகளை பற்றியும் அவருடன் சிலாங்கூர் இன்று பல்வேறு கேள்விகளை முன் வைத்தது.

கேள்விகளுக்கு பதில் அளிக்கும் முன்பு தன்னுடைய நன்றியினை தெரிவித்துக்கொண்ட டாக்டர் டரோயா அல்விஸ்,சிலாங்கூர் இன்றுவின் தரம் ஒவ்வோறு முறையும் உயர்ந்து வருவதை காணமுடிவதாகவும் இத்தகைய நேர் காணலுக்கு வாய்ப்பு அளித்த சிலாங்கூர் இன்று ஆசிரியர் குழுமத்திற்கு பாராட்டையும் நன்றியையும் அவர் கூறிக்கொண்டார்.

கேள்வி :
நடந்த முடிந்த 13 வது போது தேர்தலில் வெற்றி பெற்று செமந்தா சட்டமன்ற உறுப்பினராக ஆகிய நீங்கள்,அதற்கு முன்பு எங்கு இருந்தேர்கள் எப்படி வேட்பாளராக ஆக்கப்பட்டேர்கள் என்று சற்று விரிவாக கூற முடியுமா ?

பதில் :
ஆம் முடியும்,13வது தேர்தல் வர ஒரு ஆறு மாத காலம் இருக்கும் முன்பே என்னை செமந்தா சட்டமன்ற ஒருங்கிணைப்பாளராக நியமித்திருந்தார்கள். அந்நேரம் நான் கட்சியில் மகளியர் பகுதியில் இணைந்து சேவையாற்றிக்கொன்டு இருந்தேன். அன்றை மாநில முதல்வர் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் மகளியர் பிரநிதி யாராவது ஒருவர் வேட்பாளராக ஆக்க வேண்டும் என்னும் அடிப்படையில் என்னை செமந்தா சட்டமன்ற உறுப்பினராக்கினார்.
ஷா ஆலாமில் இருந்து நான் முதலில் ஒருங்கிணைப்பாளராக செமந்தா சட்டமன்றதிற்கு அனுப்பபட்டவுடன் அங்கு இருக்கும் மூவின மக்களை அரவனைக்கும் முயற்சிகளை மேற்கொண்டதுடன், என்னை முதலில் அறிமுகப்படுத்தி கொண்டேன். அவர்களின் குறை நிறைகளை உணர்ந்து அவர்களின் தேவைகளை மாநில அரசின் மூலம் பூர்த்தி செய்து கொடுக்கும் போது என்னை அவர்கள் மனதார ஏற்றுக்கொண்டனர். அதன் பிறகு நடந்த பொது தேர்தலிலும் என்னை அமோக வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தனர். இவ்வேளையில் நான் அவர்களுக்கு மனதார நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.

கேள்வி :
ஆரம்பத்தில் ஒருங்கிணைப்பாளராக அனுப்பபட்ட போதும், ஓர் பெண்ணாக அப்பொழுதிய உங்களின் மன நிலை என்ன?

பதில் :
சற்று பயமும் தயக்கமும் கலந்துத்தான் இருந்தது இருப்பினும் கட்சி தொண்டர்கள் உறுப்பினர்களின் ஓத்துழைப்புகள் அதிகமாக் இருந்தால், அந்த மனநிலையில் இருந்து ஒரு சில நாட்களில் நான் மாற்றிக்கொண்டேன். செமந்தா சட்டமன்றம் நிறைய சவால்கள் நிறைந்ததாக அப்பொழுது இருந்தது காரணம் 12வது தோர்தலில் போட்டியிட்ட கெஆடிலான் வேட்பாளர் தேர்தலில் போது மாயமானதை அடுத்து அங்கு கட்சியின் சார்ப்பில் ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் இருந்தது மிகப்பெரிய சவாலாக நான் கறுதினேன்..

கேள்வி :
வெற்றி பெற்றப்பிறகு உங்களின் மனநிலை?

பதில் :
என்னை எதிர்த்து வெற்றி பெற்ற தேசிய முன்னனி வேட்பாளரை 7846 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கண்டேன். மனம் நிறைய மகிழ்ச்சி இருந்தாலும், அதேவேளை பொறுப்பும் அதிகமாகி உள்ளதை நான் உணர்ந்தேன்.எனக்காக பாடுப்பட்ட அனைத்து இனத்தவர்களின் உழைப்பை நான் உணர்ந்தேன். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நான் தயாரானேன். மலாய்கார்கள், சீனர்கள், இந்தியர்கள் என்று எனக்காக தேர்தலில் உழைத்தவர்களை இந்நேரம் நான் மீண்டும் நினைத்து பார்க்கின்றேன் அவர்களை மறக்க முடியாது.

கேள்வி :
மூவினத்தவரை எப்படி ர்கின்றேர்கள் ? குறிப்பாக இந்தியர்களை.

பதில் :
என் பார்வையில் மூவினத்தவரையும் சராசரி மக்களாகத்தான் பார்கின்றேன். என் தொகுதியில் இந்தியர்கள் சற்று அதிகமாக இருப்பதால், என் சேவை மையதிற்கு வருபவர்களுக்கு சுலபமாக இருப்பதற்காக இந்திய அதிகாரிகளை வேலைக்கு அமர்த்தி உள்ளேன்.இந்தியர் என்று இல்லாமல் அவர் யாராக இருந்தாலும் என் சேவை மையம் தேடி வந்தால் நிச்சியமாக அவர்களுகான சென் சேவையை நான் தொடர்ந்து வழங்கியும் வந்துள்ளேன்.

கேள்வி :
இனங்களுக்குகிடையிலான செயல்பாடுகளும் அவர்களிம் தேவைகளும் எவ்வாறு செமந்தாவில் மேற்கொள்ளப்படுகின்றது ?

பதில் :
மூவினத்தவர்களும் வேவ்வேறு வகையான தேவைகள் தேவைப்படும். சிலருக்கு மருத்துவ உதவிகள், சிலருக்கு நல்வாழ்வு உதவிகள், சிலருக்கு வறுமானம் பற்றாகுறை, சிலருக்கு பிள்ளைகளின் உயர் கல்வி சார்ந்த உதவிகள், தனித்து வாழும் தாய்மார்கள் என்ற ஒவ்வோருவருக்கும் தேவைகள் வேறுப்பட்டிருக்கும்.
இவை அனைத்தையும் சரியாக அடையாளம் கண்டு தீர்த்து வைப்பதே மிக சவலான ஒன்று.இன வேறுப்பாடு இன்றியே இதனை நான் கையாள வேண்டும்.அப்பொழுதுத்தான் அவர்களின் ஒவ்வோரு தேவையும் சரியாக பூர்த்தி செய்ய முடியும்.

கேள்வி :
கிள்ளான் உத்தாமா மற்றும் செமந்தா பகுதிகள் அவ்வப்போது ஏற்படும் வெள்ள பிரச்சனைக்கு எவ்வாறான தீர்வை நீங்கள் கண்டுள்ளீர்கள் ?

பதில் :
ஒவோரு மழை காலத்தின் போது இந்த பிரச்சனையை நாங்கள் சந்திக்கின்றோம். கிள்ளான் உத்தாமா போன்ற பகுதிகளில் கிள்ளான் நகராண்மை கழகத்தின் உதவியுடன் அங்கே தனி இயந்திரம் ( பம் ) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது, மழை காலங்களில் போது கால்வாய்களில் நீர் பெருக்கம் ஏற்படும் நேரத்தில் அந்த இயந்திரத்தை எம்.பி.கே ஊழியர் ஒருவர் இயக்க வேண்டும்.அப்பொழுத்தான் மழை நீர் சாலைகளில் நிரைப்பி வழிவதை தடுக்க முடியும்.அந்த முன் ஏற்பாடுகள் நடமுரையில் இருந்தாலும், அவ்வப்போது கால்வாய்களில் அடைப்பு இல்லாமல் பராமரிக்கும் படி கிள்ளான் நகராண்மை கழக அதிகாரிகளிடம் நான் உத்தரவு விட்டிருருகின்றேன்.

கேள்வி :
உங்கள் பகுதியில் உள்ள சந்தையை பற்றி குறிப்பிடுங்கள் ?

பதில் :
காப்பார் பட்டிணத்தில் காலை சந்தை உண்டு,மக்களின் வசதிக்கு ஏற்ப குறைந்த விலையில் உணவு பொருட்களை அங்கே விற்பனை செய்கின்றார்கள் அத தவிர்த்து ஆங்காங்கே இரவு சந்தை என்று நகராண்மை கழகத்தின் அனுமதியுடன் சந்தைகள் போடப்படுகின்றன. இருப்பினும் காப்பர் பட்டணத்தில் இருக்கும் அந்த சந்தையை இன்னும் சுகாதார முறையில் பயன் படுத்தும் வகையிலும் அதன் தரத்தை உயர்த்தும் வகையிலும் சில மாற்றங்களை கூடி விரைவில் கொண்டு வர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

கேள்வி :
தங்கள் தொகுதியில் அதிகமான் தொழிற்சாலைகள் உள்ளன,அங்கே அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். உங்கள் தொகுதிகளில் கலாச்சார சீர்கேடுகள் அல்லது வெளிநாட்டு தொழிலாளர்களால் நம் பெண்களுக்கு ஏதேனும் சீர் கேடுகள் ஏற்பட்டுள்ளனவா ?

பதில் :
ஆம் உண்டு ஆனால் குறைவான எண்ணிக்கையில் தான் அது உள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்களை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டு பிறகு சில காரணங்களால் அவர்களை விட்டு விட்டு தனித்து வாழும் தாய்மார்களும் இருகின்றார்கள்.வெளிநாட்டினர் திருமணதிற்கு பிறகு விட்டு விட்டு சென்றவர்களும் இருகின்றார்கள்.

கேள்வி :
அடையாள அடை மற்றும் பிறப்பு சான்றிதல் இல்லா பிரச்சனை இந்தியர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகின்றது இதற்கு தீர்வு காண ஏதேனும் ஓர் முயற்சியைனை நீங்கள் மேற்கொண்டீர்களா ?

பதில்:
நிச்சியமாக இத்தகைய பிரச்சனைகள் என் தொகுதியில் அதிகமாகவே காணப்படுகின்றது, என் அலுவலகதிற்கோ அல்லது என் பார்வைக்கோ வரும் பிரச்சனையை உடனடியாக நான் என் அதிகாரிகள் இடத்தில் ஆட்சி குழு உறுப்பினர் வீ.கணபதி ராவின் பார்வைக்கு கொண்டு போக சொல்லுவேன் காரணம் அத்திட்டதிற்கான அதிகாரிகளும் அதிகாரமும் மாநில அரசு அவரின் பொறுப்பின் கீழ் கொடுத்துள்ளது.

கேள்வி :
சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலியின் கீழ் இயங்கும் மாநில அரசாங்கம் குறித்து ?

பதில் :
மிக சிறந்ததோரு நிர்வாகத்தை அவர் சிலாங்கூரில் செயல்ப்படுத்தி வருகின்றார். பெண்களுகான மானிய ஓதுக்கிடுகளிலும் தாராளமாக வழங்கிகின்றார். நல்வாழு திட்டங்களுக்கும் எங்களின் கோரிக்கைக்கு ஏற்ப செயல்ப்படுதுகின்றார். அவரின் தலைமைதுவத்தின் கீழ் பணியாற்றுவதை நான் பெருமையாக கருதுகின்றேன்.

கேள்வி :
நாட்டில் 14வது பொது தேர்தலில் ஹாராப்பான் கூட்டணியின் வெற்றி குறித்து ஏதேனும் ?

பதில் :
மக்கள் தேசிய முன்னனி மீதும் அம்னோ மீதும் அதிக கோவமாக இருகின்றார்கள், பக்காதான் ஹாராபானில் புதிய கூட்டணியாக பெர்சத்து மற்றும் அமானா கைகோர்த்திருகின்றார்கள். இது ஒரு வலிமையான கூட்டணி.மலாய்காரர்களின் வாக்குகளை பெர்சத்துவும்,இஸ்லாம் மதம் சார்ந்தவர்களின் வாக்குகளை அமனாவும், கெஆடிலான் மற்றும் டிஏபி அனைவரின் வாக்குகளையும் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.இம்முறை புத்ரா ஜெயாவை கைப்பற்றுவது உறுதி.

கேள்வி :
இறுதியாக செமந்தா சட்டமன்றத்தில் இந்தியர்களின் ஆதரவு எவ்வாறு உள்ளது ?

பதில் :
இந்தியர்களை பொருத்த மட்டில் செமந்தா சட்டமன்றமாகட்டும் ஆல்லது சிலாங்கூர் மாநிலமாகட்டும் மிக சிறப்பான அமோக ஆதரவே உள்ளது.இந்தியர்கள் எதிர்பார்க்கும் பலவற்றை நாங்கள் முறையாக செய்வதாலும் அவர்கள் நம்பிக்கை உரிய இடத்தில் இருப்பதினாலும் பக்காதான் ஹாராப்பான் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளதை எங்களால் உணர முடிகிறது. டாக்டர் டரோயா அல்விஸ் செமந்தா சட்டமன்றத்தில் மிகவும் அசைக்க முடியாத ஓர் நம்பிக்கை நட்சத்திரம் என்று கூட சொல்லும் அளவிற்கு மலாய்,சீனர்,இந்தியர் என்று அனைத்து தரப்பினரின் இடத்திலும் சிறந்த சேவையையும் நிலையான ஓர் இடத்தையும் அவர்களின் மனதில் பதிவு செய்து வைத்திருக்கின்றார். ஆக வரும் 14வது பொது தேர்தலில் டரோயாவின் சேவை செமந்தாவில் தொடர “ சிலாங்கூர் இன்று “ அவரை மனதார வாழ்த்துகிறது.


Pengarang :