NATIONAL

தேர்தல் ஆணையத்தின் தொகுதி எல்லை மறுசீரமைப்பு

கோலா லம்பூர் , மார்ச் 28:

தேர்தல் தொகுதியின் எல்லை மறுசீரமைப்பு மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. வரும் பொது தேர்தலில் இந்த புதிய தேர்தல் தொகுதியின் எல்லைகள் மாற்றப்படுள்ளன. ஒரே நாளில் விவாதிக்கப்பட்டு, உடனடியாக வாக்கெடுப்பு நடத்தி புதிய தொகுதி எல்லைகள் அறிமுகப்படுத்த பட்டுள்ளது. பொய் செய்தி சட்டத்தைப் போல் இதுவும் அவசர அவசரமாக நிறைவேற்றப்படுள்ளது. இந்த தேர்தல் எல்லை சீரமைப்பு ஏன் இத்துனை அவசரத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்?

அனைத்து தேர்தல் ஆய்வுகளும் பாரிசானுக்கு ஆதரவாக இல்லை. வரும் பொது தேர்தலில் பாரிசானும் நஜிப்பும் தோல்வி அடையகூடிய சாத்தியம் அதிகம் இருப்பதோடு, 2/3 பெரும்பான்மையயும் பாரிசான் இழக்கும் நிலைமையே காணப்படுகிறது. மாநில சட்டமன்றங்களை பொறுத்தவரையில் நான்கு மாநிலங்களில் மட்டுமே பாரிசான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அச்சமூட்டும் இந்த ஆய்வுகள் பாரிசான் தலைவர்களை நடுங்க செய்வதோடு; தோல்வி பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாரிசான் இதிலிருந்து தப்பிப்பதற்காக, வழக்கம் போல் தன் மோசடி திட்டத்தை அமுல்படுத்த தீவிரமாகி உள்ளது. எதாவது திருட்டுதனம் செய்தாலோழிய, பாரிசான் இந்த தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்பதுதான் நிதர்சணமாக உண்மை.

இந்த தேர்தலில் பாரிசான் வெற்றி பெறுவதற்கான அத்தியவசியமான தேவைகளில் ஒன்று பொய் செய்தி சட்டம். இன்னொன்று தேர்தல் எல்லை சீரமைப்பு. இதை இரண்டையும் பாரிசான் உடனடியாக அமுலுக்கு கொண்டு வருகிறது. இந்த தேர்தல் எல்லை சீரமைப்பு தேர்தலில் பெரிய தாக்கத்தை கொண்டு வருமா என்று கேட்டால்; நிச்சயமாக இது பெரிய தாக்கத்தை கொடுக்கும். ஹராப்பான் வெற்றியை இது பெரிதும் பாதிக்கும்.

இந்த எல்லை தொகுதி சீரமைப்பு பொதுவாக எதிர்கட்சிகள் வெற்றி தொகுதிகளில் மட்டுமே நடந்துள்ளது. பாரிசான் வெற்றி பெற்ற தொகுதிகளில் எந்த மாற்றமும் இல்லை. இதிலிருந்தே இது ஒரு மிகப்பெரிய மோசடி திட்டம் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். இது எப்படி பாதிப்பை கொண்டு வரும்? ஒரு சிறு விளக்கம். உதாரணத்திற்கு அன்வாரின் மகள் நூருல் வெற்றி பெற்ற லெம்பா பந்தாய் தொகுதியை எடுத்துக் கொள்வோம். இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 72,396. இதில் பிகேஆர்-ரை சேர்ந்த நூருல் 31,008 ஓட்டுகளையும், பாரிசானின் சரிசாட் 29,191 ஓட்டுகளையும் பெற்றனர். மெஜாரிட்டி 1,847 ஓட்டுக்கள் மட்டுமே. இந்த தொகுதியில் பாரிசான் கட்சி தோல்வி அடைந்ததற்கு மெஜாரிட்டி 2,000 ஓட்டுகள்தான் வித்தியாசம்.

இப்போ நஜிப் என்ன செய்கிறார் என்றால்; லெம்பா பந்தாய்-லிருந்து அந்த ரெண்டாயிரம் ஓட்டுக்களை தூக்கி, பக்கத்தில் இருக்கும் செபுத்தே மற்றும் பூச்சோங் தொகுதிக்கு மாற்றி விடுகிறார். செபுத்தேவில் தெரெசா கோக் 51,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். செபுத்தே எதிர்கட்சிகளின் கோட்டை. குட்டிகரணம் அடித்தாலும் பாரிசான் ஜெயிக்க முடியாது. ஆனால் லெம்பா பந்தாயிலிருந்து சுமார் 5,000 ஓட்டுக்களை எடுத்து விட்டால், லெம்பா பந்தாயில் எதிர்கட்சிகள் தோல்வி அடைந்துவிடும். செபுத்தேவில் 51,000 மெஜாரிட்டியில் வெற்ற பெற்ற தெரேசா கோக், இந்த முறை 56,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற போகிறார். போகட்டும் பிரச்சனை இல்லை. ஆனால் லெம்பா பந்தாய் பாரிசானுக்கு வந்துவிடும்.

பக்காத்தான் போன தேர்தலை விட இந்த முறை அதிகமான பாப்புலர் ஓட்டுககள்(Undi Populariti) வாங்கி விடுவார்கள். ஆனால் வெற்றி பெறும் தொகுதியின் எண்ணிக்கை குறைந்துவிடும். 2013-இல் பாரிசானுக்கு கிடைத்த மொத்த ஓட்டுக்கள 48 விழுக்காடு; பக்காதானுக்கு 52 விழுகாடு. இந்த முறை பக்காதானுக்கு 60 விழுகாடும், பாரிசானுக்கு 40 விழுகாடும் கிடைக்கும். இப்படியாக; குறைந்த மெஜாரிட்டி ஓட்டு வித்தியாசத்தில் பாரிசான் இழந்த தொகுதிகளில் இருந்து, கொஞ்சம் ஓட்டுகளை எடுத்து, பக்கத்தில் இருக்கும் பலமான எதிர்கட்சிகள் தொகுதிக்கு கொடுத்து விட்டார்கள்.

85,000 வாக்காளர்கள் இருந்த டாமன்சாரா தொகுதியில் திடிரென 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்களாக மாறியுள்ளார். 77,000 வாக்காளர்கள் இருந்த பண்டார் துன் ரசாக் தொகுதியில் 60,000 வக்காளர்களாக குறைந்துள்ளார்கள். இது முற்றிலும் நமது நாட்டின் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இப்படிப்பட்ட ஒரு தொகுதி எல்லை சீரமைப்புகளை செய்யவே முடியாது. வாக்காளர்களின் முகவரி, விருப்பம், ஆட்சேபம், எல்லாவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் கடந்த மூன்றாண்டுகளில், எந்த தேர்தல் சாசனத்தையும் பின்பற்றாமல் தன்போக்காகா இந்த மாற்றங்களை நஜிப் செய்துள்ளார்.

டாமன்சாரா போன்ற தொகுதிகள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் அதிகரித்த வேளையில் அதை இரண்டாக உடைக்க வேண்டுமே தவிர, ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாக்களர்களை சேர்த்து வைத்திருப்பது அராஜகம். விதி மீறல். இந்த தேர்தல் தொகுதி எல்லை சீரமைப்பால் இந்தியர்களின் ஓட்டு பல இடங்களில் சிதறிப் போய் உள்ளது. இதனால் பல தொகுதிகளில் இந்தியர்களின் ஓட்டு பாரிசான் மற்றும் ஹராப்பான் என இரு கூட்டணிக்குமே பயனில்லாமல் போய் விட்டது. வெற்றி தோல்வியை நிர்ணியிக்கும் சக்தியிலிருந்து நம்மை மிக நாசுக்காக அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். எல்லை சீரமைப்பு செய்த தொகுதிகளில் நம் இந்தியர்களின் ஓட்டு செல்லாக்காசாக போய்விட்டது.

இதை எதிர்த்து ஒன்றுமே செய்ய முடியாதா? வழக்கு தொடுக்கலாம். ஆனால் இந்த வழக்கு முடிவதற்குள் தேர்தலே முடிந்துவிடும். இப்போதைக்கு எதிர்க்கட்சிகள் இதை தைரியத்தோடு எதிர்நோக்க வேண்டும். வேறு வழியே இல்லை. இது போன்ற அடக்குமுறைகள்; மக்களுக்கு விரோதமான ஆட்சியை நீக்குவதற்கு நம்மிடம் இருக்கும் ஆயுதம் ஓட்டு. அதை மிக சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேர்தல் எல்லை சீரமைப்பு மூலம் அம்னோ 70 இடங்கள் வரை தனித்து வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள். MCA,MIC,GERAKAN,PPP ஒரு இடங்கள் கூட வெற்றி பெறாது. சபா,சராவக்கில் 40 இடங்கள் வரை பாரிசான் வெற்றி பெறும் என்று கணிக்கிறார்கள்.

அம்னோ 70 + சபா,சராவாக் 40= மொத்தம் 110 சீட் பாரிசான் அடித்து பிடித்து வெற்றி பெற்று விடும் என்று வைத்துக் கொள்வோம். ஆனாலும் ஆட்சி அமைக்க தேவையான 115 இடங்கள் கிடைக்காது. அப்படியும் பாரிசானுக்கு ஆட்சி அமைக்க 5 இடங்கள் தேவைப்படும். பாஸ் கட்சி எப்படியும் 5 முதல் 10 இடங்கள் வரை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. பாரிசானுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்க பாஸ் முன் வருவார்கள். அப்படி பாஸ் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதற்கு அவர்கள் வைக்கும் முக்கிய டிமாண்ட்; முழுக்க முழுக்க மலாய்காரர்கள் மட்டுமே கொண்ட அரசாங்கத்தை தோற்றுவிக்க பாரிசானை நிர்பந்த்திப்பார்கள். சீனர்களோ, இந்தியர்களோ அந்த அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்க மாட்டார்கள். 100 விழுகாடு மலாய் அரசாங்கம் அமையும். இதைதான் ராஜ பெட்ராவும் குறிப்பிடுகிறார். சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் ஏன் அரசாங்கத்தில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்கிற கேள்வியை முன் வைக்கிறார்.

1946-ஆம் ஆண்டு அம்னோ அரம்பித்த நோக்கமே 100 விழுகாடு மலாய் நாட்டை உருவாக்குவதுதான். இந்தியர், மற்றும் சீனருடன் அதிகார பகிர்வை ஏன் எற்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நினைத்தார்கள். ஆகையால் அம்னோ மலாயன் யுனியன்னை மிக கடுமையாக எதிர்த்தது. கடைசியில் பிரிட்டிஷ் அரசாங்கம் வேறு வழி இல்லாமல் மலாயன் யுனியனை கலைத்து விட்டு ஒருங்கிணைக்கப்பட்ட மலாய் நாட்டை உருவாக்கினார்கள். இந்த இடத்தை ராஜ பெட்ரா குறிப்பிடுகிறார். அம்னோ ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து விலகி; தன் அரசியல் லாபத்துக்காக சீனர் மற்றும் இந்தியர்களுடன் அதிகார பகிர்வை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்று.

ஆகவே அம்னோ மட்டும் வெற்றி பெற்று; பாரிசானில் இருக்கும் மற்ற கூட்டணி கட்சிகள் தோல்வி அடைந்து; பாஸ் உதவியுடன் ஆட்சி அமைந்தால் அது முழுக்க முழுக்க மலாய் அரசாங்கமாக இருக்கும். சீனர்களிடம் பொருளாதர பலம் இருப்பதால்; அவர்கள் யாருகாவது செம்பு தூக்கி; தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள். நம் இந்தியர்களின் நிலை இன்னும் மோசமாக போய்விடும். அப்படியே பாரிசான் வெற்றி பெற்றாலும் நஜிப் நீண்ட காலத்துக்கு பிரதமராக நீடிக்க முடியாது. மெக்ஸிமம் மூன்றாண்டுகள்தான் பதவியில் இருப்பார். அதன் பிறகு அமிடியோ அல்லது ஹிசாமுடினோ தான் வருவார்கள். இதுவும் நமக்கு சாதகமாக சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்காது. இந்த நாட்டின் தலையெழுத்தையும்; நம் இந்தியர்களின் எதிர்காலத்தையும் முடிவு செய்யும் மிக முக்கிய இடத்தில் நாம் இப்போது உள்ளோம். இந்த வாய்ப்பை இப்போது நாம் மிஸ் பண்ணினால் இனி காலம் முழுவதும் வேதனைப்பட வேண்டியதுதான்.

இப்போதைக்கு பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக்கு வருவதுதான் நமக்கும் நாட்டுக்கும் நல்லது. நமது அடையாளத்தையும், ஆதாரத்தையும் பதிவு செய்யும் முக்கிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை சமுதாயம் உணர வேண்டும்.


Pengarang :