NATIONAL

நஜிப் நாட்டின் கடன்கள் அதிகரிப்பை மூடிமறைக்க சிலாங்கூர் குடிநீர் பிரச்சனையை எழுப்புகிறார் !!

நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் 1 மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் கடன் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் குடிநீர் விநியோகச் சேவைவை மேற்கோள்காட்டி பிரச்சினையை திசை திருப்புகிறார் என்று கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி இன்று மக்களவையில் குற்றம் சாட்டினார். சிலாங்கூர் மாநிலத்தை குறை சொல்வதற்கு முன்பு பல நாடுகளில் விசாரணையை எதிர் நோக்கி இருக்கும் 1எம்டிபி சம்பந்தமான கடன்களை தீர்க்க முயற்சி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

”  நியூஸ் ஸ்டிரீட் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் நஜீப் நாட்டை வழிநடத்திய பிறகு திரும்பி செலுத்தும் கடன் தொகை 12.5% எட்டியுள்ளது. சிங்கப்பூரை ஒப்பிடும் போது தனது மொத்த வருமானத்தில் இருந்து 6% மட்டுமே திரும்பி செலுத்தும் கடன் தொகைக்கு பயன் படுத்தி வருகிறது,” என்று மக்களவையில் பேசினார்.

ஆனாலும் நஜீப் ரசாக், அஸ்மின் அலி கேட்டக் கேள்விக்கு பதில் அளிக்காமல் சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் குடிநீர் விநியோகச் சேவை குறைக் கூறினார்.

#தமிழ் பிரியன்


Pengarang :