SELANGOR

நிலையான அரசியல் தன்மையும் முதலீட்டாளர்களுடான நெருக்கமும் மாநிலத்தின் முதலீட்டை அதிகரிக்கிறது

ஷா அலாம், மார்ச் 28:

சிலாங்கூர் மாநிலத்தின் நிலையான அரசியல் தன்மையும் அதேவேளையில் இம்மாநிலத்தின் முதலீட்டாளர்களுடன் அது கொண்டிருக்கும் நெருக்குமான நட்புறவும் மாநிலத்தின் முதலீட்டை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சிலாங்கூர் மாநிலம் கடந்தாண்டும் இம்மாநிலத்திற்கு கொண்டு வந்த முதலீடுகள் இம்மாநிலம் முதலீடு செய்வதற்கு ஏற்றதாகவும் அதேவேளையில் முதலீட்டாளர்களின் நம்பிகையை பெற்ற மாநிலமாகவும் விளங்குவதற்கு சான்றாக இருப்பதோடு மாநில அரசாங்கத்தின் கொள்கையும் போக்கும் முதலீட்டாளர்களை ஈர்க்கவும் அதேவேளையில் அவர்களின் முதலீட்டை அதிகரிக்கவும் வழி செய்வதாக முதலீடு,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை,வாணிபம் மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தேங் சாங் கிம் குறிப்பிட்டார்.

மேலும்,உள்ளூர் தொழிலாளர்களின் ஆங்கிலம் பேசும் திறன், முதலீட்டாளர்களுடனான நெருக்கம்,சிறந்த மற்றும் வசதியான உட்கட்டமைப்பு,பாதுகாப்பான சூழல் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் பிள்ளைகளின் கல்வி வசதி ஆகியவையும் இம்மாநிலத்தில் தொடர்ந்து முதலீடுகள் அதிகரிக்க பிற காரணியங்களாக திகழ்கின்றனர் என்றும் கூறினார்.

தொடர்ந்து கூறிய அவர் எலெக்டிரிக்கல்,எலொக்ட்ரோனிக்.போக்குவரத்து பாகங்கள்,அறிவியல் வாழ்வியல்,உணவு மற்றும் இயந்திரம்,பொருட்கள் ஆகியவற்றில் மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறிய அவர் மேலும்,இ-கோமர்ஸ்,பையோ – தெக்னொலோஜி,விண்வெளி மற்றும் ஹலால் தொழில்துறை ஆகியவற்றிலும் கவனல் செலுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
கடந்தாண்டில் தொழிற்சாலை துறையில் சிலாங்கூர் மாநிலம் நேரடி முதலீட்டின் மூலம் வெ.5.59 பில்லியனை ஈர்த்ததாகவும் சேவைத்துறை சார்ந்து வெ.4 பில்லியனும் ஐகியா (IKEA) நிறுவனத்தின் பெரும் மையம் ஒன்றை பூலாவ் இண்டாவில் தொடங்கியதன் மூலம் வெ.908 மில்லியனும் கிடைத்ததாகவும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில்,சிலாங்கூர் மாநிலம் கடந்தாண்டில் சுமார் 202 தொழிற்சலைகளுக்கு அணுமதி கொடுத்திருப்பதாகவும் இது பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் முதல் நிலையை உருவாக்கியிருப்பதோடு மட்டுமின்றி இதன் மூலம் 10,000 வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.இதில் நெதர்லந்து நாட்டின் மூன்று திட்டங்கள் வெ.162,080ஐயும் ஜெர்மனி நாடு அதன் மூன்று திட்டங்களில் வெ.147,173,824 நிங்கிட்டையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :