SELANGOR

நீர்தொழில் துறை மறுசீரமைப்பு முயற்சிகள் சிறப்பாகவே மேற்கொள்ளப்படுகிறது

ஷா ஆலாம், மார்ச் 28:

மாநில அரசாங்கம் திட்டமிட்டபடியே மிகவும் சிறப்பாக இம்மாநிலத்தின் நீர் தொழில்துறை மறுசீரமைப்பு பணியினை மேற்கொண்டு வருவதாகவும் அவை எவ்வித தடையுமின்றி ஆக்கப்பூர்வமாகவே நடைபெற்று வருவதாகவும் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.
புஞ்சா நியாகா ஹல்டிங் மாநில அரசிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டிருந்த போதிலும் அவர்களின் செயல்பாட்டுக்கு எதிராக மாநில அரசாங்கம் அவர்கள் கொடுத்த வழக்கினை உயர்நீதி மன்றம் கடந்த 22 பிப்ரவரி 2018இல் இரத்து செய்தது என்றும் அவர் நினைவுக்கூர்ந்தார்.

புஞ்சாக் நியாகா தாக்கல் செய்த வழக்கில் மாநில அரசாங்கம் முன் வைத்த ஆதாரங்கள் மற்றும் விளக்கங்களா ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அந்நிறுவனத்தின் சம்மன்னை இரத்து செய்தது.இதன் மூலம் மாநில அரசாங்கம் வெ.14 பில்லியனை காப்பாறியதாகவும் கூறினார். சம்மந்தப்பட்ட நிறுவனம் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் தவறான செயல்பாட்டை மேற்கொண்டதால் சம்மன் அனுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.சட்டமன்றத்தில் இதுகுறித்து டத்தோஸ்ரீ வான் அசிசா எழுப்பிய கேள்விக்கு மந்திரி பெசார் இவ்வாறு பதிலளித்தார்.

இந்நடவடிக்கையின் முதற்கட்டமாக பழைய குழாய்களை மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அது தொடர்பில் சுமார் 84 இடங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவை 423 கி.மீட்டர் தூரத்தை கொண்டது என்றும் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.இந்நடவடிக்கை கட்டகட்டமாக இவ்வாண்டு இறுதிக்குள் முடிவடையும் என்றும் தெரிவித்தார்.இத்திட்டம் வெ.334.3 மில்லியன் செலவினையும் கொண்டது என்றும் குறிப்பிட்டார்.

சிலாங்கூரில் இனி வருங்காலங்களில் நீர் துறை மிகவும் சிறப்பாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அதேவேளையில் மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் கொடுத்திடாத நிலையில் அதன் செயல்பாடுகள் இருக்கும் என்றும் மந்திரி பெசார் நம்பிக்கை தெரிவித்தார்.அதுசார்ந்த ஒவ்வொரு நடவடிக்கைகளையும் செயல்பாடுகளையும் மாநில அரசாங்கம் தற்போது விவேகமாகவும் தூரநோக்கு பார்வையோடும் மேற்கொண்டு வருவதாகவும் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி சட்டமன்றத்தில் தெரிவித்தார்.


Pengarang :