SELANGOR

பலாகோங் சட்ட மன்றத்தின் ஸ்மார்ட் சிலாங்கூர் கிஸ் அட்டை வழங்கும் நிகழ்ச்சி

பலாகோங், மார்ச் 4:

பலாகோங் சட்ட மன்றத்தின் ஸ்மார்ட் சிலாங்கூர் கிஸ் அட்டையை பெற்றவர்களில் 313-இல் 130 இந்திய தாய்மார்களும் அடங்குவர். கிஸ் விவேக அட்டை தகுதியுடைய சிலாங்கூர் தாய்மார்களுக்கு வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் ரிங்கிட் மலேசியா 200க்கு வீட்டு சமையல் பொருட்கள் மற்றும் வீட்டு உபகாரணப் பொருட்கள் வாங்க சிலாங்கூர் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.
பலகோங் இந்தியா சமூக தலைவர் திரு கிறிஸ்டி லூயிஸ் பிரான்சிஸ் மற்றும் அவரது ஜேகெகெ உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல் ஆற்றி வெற்றிகரமாக இந்திய தாய்மார்களுக்கு கிஸ் அட்டையை வழங்கினார்கள்.


இந்நிகழ்வில் மாண்புமிகு எடி ங், பலகோங் சட்டமன்ற உறுப்பினர், செர்டாங் நாடாளுமன்ற உறுப்பினர், மாண்புமிகு டாக்டர் ஓங் கியான் மிங், மற்றும் காஜாங் நகராண்மை கழக உறுப்பினர் திரு தியாகராஜன் கோபால் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு 130 தாய்மார்களுக்கு கிஸ் அட்டையை வழங்கினார்கள்.

கடந்த 25.2.2018 அன்று சிற்றுண்டியுடன் நடைபெற்ற இந்நிகழ்வு பலகோங் சட்டமன்ற சேவை மையத்தில் காலை மணி 10 முதல் மதியம் 1 மணி வரை நடைப்பெற்றது.

#தமிழ் அரசன்


Pengarang :