NATIONAL

பாக்காத்தான் 14-வது பொதுத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை நாளை அறிவிக்கவிருக்கிறது

கோலா லம்பூர், மார்ச் 7:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி, எதிர் வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அதிகாரப்பூர்வமாக நாளை அறிவிப்பு செய்ய இருக்கிறது என்று கூட்டணியின் அமைப்பு செயலாளர் டத்தோ சைப்பூஃடின் அப்துல்லா கூறினார். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி, அம்னோ தேசிய முன்னணியிடம் இருந்து புத்ரா ஜெயா நிர்வாகத்தை கைப்பற்றிய பிறகு அமுல்படுத்தும் முக்கிய ஐந்து அடிப்படை கூறுகளை உள்ளடக்கி இருக்கும் என்று தெரிவித்தார்.

”  பாக்காத்தான் தேர்தல் வாக்குறுதிகள் பல்வேறு கலந்தாய்வுக்கு பிறகு அறிவிக்கப்பட இருக்கிறது. 60 அம்சங்களை கொண்டிருக்கும்  இந்த தேர்தல் வாக்குறுதிகள் ஐந்து ஆண்டுகளில் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படும். அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கவும், ருக்குன் நெகாரா, மறுமலர்ச்சி கொள்கை, இஸ்லாமிய நிர்வாகம் மற்றும் திறன்மிக்க நிர்வாகம் போன்ற அம்சங்களை கொண்ட தேர்தல் வாக்குறுதியாக இது அமையும்,” என்று சைப்பூஃடின் அறிவித்தார்.

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் ஐந்து அடிப்படை கூறுகளை உள்ளடக்கியது:-

1. மக்களின் வாழ்க்கை சுமைகளை குறைப்பது

2. நாட்டின் நிர்வாகம் மற்றும் அரசியல் மறுமலர்ச்சி

3. நீதியான மற்றும் சமசீரான பொருளாதார வளர்ச்சி

4. 1963 மலேசிய ஒப்பந்த அடிப்படையில் சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்

5. உலக ரீதியில் தலைசிறந்த, மிதவாத மற்றும் அனைத்தும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மலேசியாவை உருவாக்குவது

#தமிழ் பிரியன்


Pengarang :