NATIONAL

புத்ரா ஜெயாவை கைப்பற்றிய 100 நாட்களில், காப்பார் மக்களின் பிரச்சனைகள் முடிவுக்கு கொண்டு வரப்படும்

காப்பார், மார்ச் 4:

நம்பிக்கை கூட்டணி எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் புத்ரா ஜெயாவை கைப்பற்றிய நூறு நாட்களில் காப்பார் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று கெஅடிலான் கட்சியின் உதவி தலைவர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார். காப்பார் இந்திய அரசு சாரா அமைப்பினரின் அழைப்பின் பெயரில் காப்பாருக்கு வருகையளித்த அவர், அப்பகுதியில் உள்ள இந்தியர்கள் எதிர் நோக்கும் பல பிரச்சனைகளை அவரிடத்தில் தெரிவித்ததுடன் அவரை அழைத்துக்கொண்டு அப்பகுதியை சுற்றியும் காட்டினர். காப்பாரில் சில இடங்களை பார்வையிட்ட பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில்,காப்பார் காலம் காலமாக இந்தியர்களின் கோட்டையாக விளங்கி வருகின்றது.

அன்றும் சரி இன்றும் சரி அதை இந்தியர்களின் முக்கியமான ஒரு தொகுதியாகவும் திகழ்ந்து வருகின்றது.ஆனால் மத்திய அரசின் மூலம் தீர்வு காண வேண்டிய பல முக்கிய அடிப்படை பிரச்சனைகள் இன்னும் தீர்வு காணாமல் அப்படியே இருப்பது மனதிற்கு வேதனையை தருகின்றது.குறிப்பாக பள்ளி மாணவர்கள் வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது.

நாட்டினிலேயே பெரிய தொகுதியாக திகழும் இத்தொகுதியில் மருத்துவமனை இல்லை, காப்பாரில் இருந்து கிள்ளான் பொது மருத்துவமனைக்கு செல்ல குறைந்தது 45 நிமிடங்கள் தேவை வார வாரம் சலைகள் ஏற்படும் விபத்தில் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகின்றது இப்பகுதியில் முறையான அம்புலன்ஸ் வசதி இல்லை அடையாள அட்டை மற்றும் பிறப்பு சான்றிதல் பிரச்சனைகளும் அதிகமாகவே இருகின்றது, ,சாலைகள் மிக மோசமாக உள்ளது சலையில் பயணிக்கவே பயமாக உள்ளது என்பதுடன் பொது மக்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை நிலையும் இங்கே நிலவுகின்றது.

இப்படி பல அடிப்படை பிரச்சனைகளை காப்பார் மக்கள் எதிர் நோக்கி வருவதை அரசு சாரா அமைப்பினர் என் பார்வைக்கு கொண்டு வந்துள்ளனர்.
மத்திய அரசின் மூலம் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சனைகளைத்தான் இவர்கள் இப்பொழுது என்னிடம் தெரிவித்திருகின்றனர்.நம்பிக்கை கூட்டனி புத்ரா ஜெயாவை கைப்பற்றிய நூறு நாட்களில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் காப்பாரில் இயங்கி வரும் சிறு வணிகர்களுக்கு என்று முறையான கடை வசதி இல்லை என்பதை கவனத்தில் எடுத்துக்கொண்ட அவர் செமந்த சட்டமன்ற உறுப்பினர் டரோயா அல்விஸ் உடன் பேச்சு வார்த்தை நடத்தி 20 கடைகளை கட்ட ஏற்பாடு செய்யவிருப்பதாக சிறு வணிகளை சந்தித்த பிறகு அவர் செய்தியாளர்கள் இடத்தில் தெரிவித்தார்.

#வேந்தன்


Pengarang :