SELANGOR

பொய்யான தகவல்களை பரப்பி கீஸ் திட்டத்தை மாசுபடுத்த முயற்சி?

கோத்தா டமன்சாரா, ஏப்ரல் 1:

சில வாரங்களாக புலனங்களில் (வோட்ஸ்ஆப்) அன்புத் தாய் விவேக சிலாங்கூர் அட்டை திட்டத்தை (கீஸ்) பற்றிய தவறான தகவல்களை அரசியல் கண்ணோட்டத்தில் பரப்பி வருகின்றனர் என்று கோத்தா டமன்சாரா சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் முகமட் ரஸ்லான் ஜலாலூடின் தெரிவித்தார். இதில் கீஸ் அட்டை விண்ணப்பத்திற்கு உண்மைக்கு புறம்பான  தகுதிகள் மாநில அரசாங்கம் விதிக்கிறது என்ற தகவல் ஆகும்.

”  சிலாங்கூர் மாநில திட்டத்தை மாசுபடுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த செய்திகளை நம்பாதீர்கள். ஸாகாட் மற்றும் சமூக நலத்துறை உதவிகள் கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது என்றும் ஒரு சில கட்சியினர் மட்டுமே கீஸ் அட்டைகள் கிடைக்கின்றன என்ற செய்திகள் அவதூறுகள் ஆகும். புலனங்களின் வழி அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

 

 

 

 

 

கு.குணசேகரன்


Pengarang :