SELANGOR

மந்திரி பெசார்: அம்னோ சட்ட மன்ற உறுப்பினர்களும் இரகசியமாக நிதி ஒதுக்கீட்டை கேட்கின்றனர்?

ஷா ஆலாம், மார்ச் 26:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் கடந்த 13-வது பொதுத்  தேர்தலில் மாநில மக்களின் தீர்ப்பை மதிக்கிறது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இதன் அடிப்படையில், மாநில அரசாங்கம் அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் சட்ட மன்ற மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டை வழங்கி உள்ளதாக தெரிவித்தார். இதில் எதிர்க்கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டது என்று விவரித்தார்.

”  சற்று முன்பு அம்னோ சட்ட மன்ற உறுப்பினர்கள் என் காதில் கிசுகிசுத்தனர். நிதி ஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தினர். சிலாங்கூர் மாநில அரசாங்கம் மட்டுமே எதிர்க்கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு வழங்கி உள்ளது. மத்திய அரசாங்கம் கூட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த நிதி ஒதுக்கீடு சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு வழங்கப்பட்டது. அரசியல் கட்சிகளின் பிரச்சாரக் கூட்டத்தில் அல்லது. நாங்கள் கொடுமைக்காரர்கள் என்று சித்தரித்து காட்ட வேண்டாம்,” என்று சட்ட மன்ற கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் அஸ்மின் அலி  பேசினார்.

 


Pengarang :