NATIONAL

மின்சார தூண்களில் பிரச்சார பொருட்களைப் பொருத்தாதீர்

கோலாலம்பூர், மார்ச் 21:
14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், பிரச்சார கால கட்டத்தின்போது மின்சாரம் தாக்கக் கூடிய இடங்களில் தேர்தல் அறிக்கைகளையும் பதாகைகளையும் ஒட்டவோ மாட்டவோ வேண்டாம் என மின்சார வாரிய (டிஎன்பி) தலைமை அதிகாரி டத்தோ ரொஸ்லான் ரஹ்மான் கேட்டுக் கொண்டார்.
#தமிழ் முரசு
கொடிகளையும் பதாகைகளையும் மின்சார தூண்கள், கேபிள், மின்சாரப் பெட்டி ஆகியவற்றின் மீதெல்லாம் ஒட்டுவதும் பொருத்துவதும் தேர்தல் காலத்தில் வழக்கமாக நடைபெறும்.
இதில் கவனக்குறைவாக செயல்பட்டால், மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. அதோடு, மின் கசிவும் ஏற்படலாம். இந்த அபாயகரமான செயல் சட்டப்படி குற்றமாகும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகையால், நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மின்சார தூண்களில் அல்லது அது சம்பந்தமான இடங்களில் தங்களின் பிரச்சார சுவரொட்டிகளை பொருத்த வேண்டாம் என ரொஸ்லான் கேட்டுக் கொண்டார்.
மேலும், மின்சாரத் தூண்களில் மாட்டப்பட்டுள்ள கொடிகளை தொட வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஒருவேளை மின்கசிவு ஏற்பட்டிருந்தால், மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது என்று அவர்களுக்கு நினைவுறுத்தப்பட்டுள்ளது.
எந்தப் பகுதியிலாவது மின்சாரம் தாக்கும் அபாயம் இருந்தால் 15454 எனும் எண்ணுக்கு அழைத்து பொதுமக்கள் புகார் செய்யலாம்.

Pengarang :