Uncategorized @ta

ஷா ஆலாம் அரங்கம் தொடர்பில் எப்ஃஏஎஸ்-இன் நாடகத்தை நாம் கண்டுக் கொள்ள வேண்டாம் !!!

ஷா ஆலாம், மார்ச் 27:

சிலாங்கூர் மாநில அரசாங்கம், ஷா ஆலாம் அரங்கத்தை பயன்படுத்துவது தொடர்பில் சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் கபட நாடகத்தை கண்டுக் கொள்ளத் தேவையில்லை என்று சிலாங்கூர் மாநில இளையோர் மேம்பாடு, விளையாட்டு, பண்பாடு மற்றும் தொழில் முனைவர் மேம்பாடு ஆட்சிக் குழு உறுப்பினர் அமிரூடின் ஷாரி கூறினார். பேச்சுவார்த்தைகளுக்காக நீண்டகாலமாக காத்திருந்தும் பயன் அளிக்காமல் போனதாக தெரிவித்தார். கால்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் அண்மையில் தம்மை சந்திக்க மறுத்து விட்டதாக கடிதம் அனுப்பி உள்ளதாக அமிரூடின் ஷாரி கூறினார்.

”   சிலாங்கூர் சுல்தான் கிண்ண போட்டிக்கு குழுவை அனுப்ப மறுத்து விட்டார்கள். மாநில அரசாங்கத்திடம் தங்களின் முடிவை தெரிவிக்கவும் தவறிவிட்டனர். இறுதியில், நாம் பேச்சுவார்த்தை நடத்த மீண்டும் முயற்சி செய்த போது, சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் என்னை சந்திக்க மறுத்து விட்டதாக கடிதம் அனுப்பி உள்ளார். ஆகவே , இந்த பிரச்சினையை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். மாநில அரசாங்கத்தை தாக்குதல் நடத்த வேண்டும். மாநில அரசாங்கம் மீது அவதூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சிலாங்கூர் கால்பந்து சங்கத்தினர் செயல்பட்டு வருகின்றனர்,” என்று சிலாங்கூர் மாநில சட்ட மன்றத்தில் உணர்ச்சி பொங்க பேசினார்.


Pengarang :