SELANGOR

ஸ்பிளாஷ் பிரச்னைகளின் காலவரிசை  

 

தேசிய முன்னணி அரசாங்கம் கடந்த 2000ஆம் ஆண்டில் சிலாங்கூரில் நீர் சுழற்சியை கட்டுப்படுத்தவும், ஒழுங்கமைக்கவும் மற்றும் அதனை பராமரிக்கவும் சிலாங்கூர் ஆற்று நீரை பராமரிக்கும் நிறுவனமான “ஸ்பிளாஷ் நிறுவனத்திடம் 30 வருட ஒப்பந்தத்தில் வழங்கியது.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மூன்று பம்ப் முறையாக பழுதுபார்க்கப்படாமல் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 30 மில்லியன் லிட்டர் நீர் இழப்பு ஏற்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.மக்களின் புகாரின் அடிப்படையில் இது கண்டறியப்பட்டுள்ள சூழலில் நான்காவது பம்ப் மூலம் அறியப்படுகிறது.

“ஸ்பிளாஷ் நிறுவனம் மேம்படுத்தும் பணியினை மட்டுமின்றி சீரமைப்பு,பழுதுபார்த்தல் உட்பட எந்தவொரு நடவடிக்கையிலும் ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளாமல் போனதோடு அவசரக்கால நேரங்களில் மாற்று வழியை கையாள்வதிலும் திறன் இல்லை.

மார்ச் 5-இல் பழுது மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக கோலாலம்பூர்,ஷா ஆலம், பெட்டாலிங்,கிள்ளான்,கோம்பாக் மற்றும் உலுசிலாங்கூர் ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் குறைய தொடங்கியது.

மார்ச் 6-இல் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணியின் போது 1,100 அளவிலான ஐந்து காற்று அழுத்த குழாய்கள் சேதமடைந்ததால் ஐவர் காயத்திகுள்ளானதோடு சீரமைப்பு பணியினை மேலும் தொடர வேண்டிய சூழல் உருவானது.

மார்ச் 7-இல் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சம்பவ இடத்தை பார்வையிட்ட பின்னர் தனது அறிக்கையில் மார்ச் 9ஆம் தேதி முடிவடைய வேண்டிய பணிகள் தொடர்ந்து 10 மற்றும் 11ஆம் தேதி வரை தொடரும் என்றும் அஃது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நீடிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மார்ச் 8-இல் சிலாங்கூர் மாநில நீர் வாரியம் பெட்டாலிங்,கிள்ளான், கோலாலம்பூர், மற்றும் கோம்பாக் ஆகிய பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக 16 பொது நீர்குழாய்களை செயல்பாட்டிற்கு ஏற்பாடு செய்தது.முதன்மை நீர் சுத்திகரிப்பு மையம் அதன் இறுதிக்கட்ட செயல்பாடுகளை கொண்டிருந்தது.திட்டமிட்டப்படி காலவரைவுக்குள் எல்லாம் நகர்ந்துக் கொண்டிருந்தது.

மார்ச் 9-இல் சிலாங்கூர் நீர் வாரியம் சிலாங்கூர் பிரிவு 3 (எஸ்.எஸ்.பி 3) நீர் சுத்திகரிப்பு மையம் பயன்பாட்டிற்கு தயாராகி விட்டதாக தனது அறிக்கையில் கூறியது.மேலும்,நீர் விநியோகம் கட்டகட்டமாக மேற்கொள்ளப்படும்.அனைத்து பகுதிகளுக்கு இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலையில் மார்ச் 10இல் முழுமையாக கிடைத்து விடும்.அதுவும் நீர் அழுத்தத்தின் அடிப்படையில் என்றது.

மார்ச் 10-இல் சிலாங்கூர் நீர் வாரியம் மார்ச் 11ஆம் தேதி மாலை மணி 6 வரை அதன் நீர் மேம்பாட்டு விவரத்தை வரையறுத்தது.

மார்ச் 12-இல் காலை மணி 10க்கு சிலாங்கூர் நீர் வாரியம் கிள்ளான்,ஷா ஆலம்,கோலாலம்பூர்,கோம்பாக்,உலுசிலாங்கூர் மற்றும் கோலாலங்காட் ஆகிய வட்டாரங்களிலும் பெட்டாலின் பகுதியில் மூன்று இடங்களை தவிர அனைத்து பகுதிகளுக்கும் நீர் விநியோகம் முழுமையாகவும் நிறைவாகவும் மேற்கொள்ளப்பட்டு விட்டதாகவும் அறிவித்தது.

தொகுப்பு : சிலாங்கூர் இன்று


Pengarang :