SELANGOR

100 ஆண்டுகள் பழமையான சபாக் பெர்ணம் ஆலயத்திற்கு நிலப்பட்டாவை மாநில அரசாங்கம் வழங்கியது

சபாக் பெர்ணாம், மார்ச் 4:

100 ஆண்டுகள் பழமையான ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு நிலப்பட்டாவை கெஆடிலான் உதவித் தலைவர் சேவியர் ஜெயகுமார் ஆலய நிர்வாகத்தினரிடத்தில் எடுத்து வழங்கினார். பல வருடங்களாக ஆலய நிலத்திற்காக போராடி வரும் நாங்கள் ,2008 ஆம் ஆண்டு பக்காதான் அரசாங்கம் வந்தப் பிறகே ஆலயதிற்கான நிலம் அன்றைய ஆட்சி குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமாரின் முயற்சியால் உறுதி செய்யப்பட்டது.


இருப்பினும் பட்டாவில் ஏற்பட்ட அச்சு பிழையால் ஆலயதிற்கு வந்த சேரவேண்டிய பட்டா கால தாமதம் ஏற்பட்டிருந்தது. இவ்விவகாரத்தை மீண்டும் டாக்டர் சேவியர் ஜெயகுமாரின் கவனதிற்கு ஆலய நிர்வாகம் கொண்டு போனதாக ஆலய தலைவர் பாலமுருகன் தெரிவித்தார். நீண்ட நாள் இழுவையில் இருந்த இவ்விவகாரம் டாக்டர் சேவியரின் தலையிட்டால் மீண்டும் சரி செய்யப்பட்டு ஆலய நிர்வாகத்திடம் அதன் பட்டா ஒப்படைக்கப்பட்டதாகவும் அதற்கு சிலாங்கூர் மாநில முதல்வர் அஸ்மின் அலிக்கும் சேவியர் அவர்களுக்கும் ஆலயம் சார்ப்பாகவும் சபாக் பெர்ணம் இந்து மக்களின் சார்ப்பாகவும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

#வேந்தன்


Pengarang :