SELANGOR

இந்தியர்களின் உரிமையும் தேவைகளும் சிலாங்கூரில் பாதுகாக்கப்படுகிறது

டெங்கில், ஏப்ரல் 4:

சிலாங்கூர் மாநிலத்தில் அதிகமான இந்தியர்கள் வசிக்கும் பகுதிகளில் டெங்கில் வட்டாரமும் ஒன்று.இத்தொகுதியில் இந்தியர்கள் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.இந்திய சமுதாயத்தின் எதிர்காலமும் வளமான வாழ்வாதரமும் நடப்பு மாநில அரசால் சாத்தியமாகிறது எனும் நம்பிக்கையையும் அவர்கள் கொண்டுள்ளனர்  என இத்தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஹஜி போர்ஹான் அமான் ஷா பெருமிதமாக கூறினார்.

  கடந்தக்காலங்களை போல் இல்லாமல் தற்போதைய சூழலில் இந்தியர்கள் விவேகமாக முடிவெடுக்கும் தன்மையை கொண்டுள்ளனர்.அவர்கள் எல்லாவற்றையும் சரியாக மதிப்பீடு செய்து தங்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குகின்றனர் என்றார்.நாட்டின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் பெரும் பங்காற்றிய இந்திய சமுதாயத்தை சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஒருபோதும் ஓராங்கட்டி விடாது எனும் பெரும் நம்பிக்கை தற்போது இத்தொகுதி இந்தியர்களிடையே வலுவாய் பதிந்துள்ளது என்றும் கூறினார்.

   டெங்கில் சட்டமன்றத்தில் கடந்த இரு பொதுத் தேர்தல்களிலும் நாம் தோல்வியுற்றிருந்தாலும் மாநில அரசு நம் வசம் இருப்பதால் இத்தொகுதியில் தொடர்ந்து மக்கள் சேவையும் மக்களுக்கான பணிகளும் மிகவும் தெளிவாகவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.மாநில வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் எந்தவொரு இனமும் கைவிடப்பட்டு விடக்கூடாது என மிகவும் கவனமாக செயல்படும் மாநில அரசாங்கம் தொடர்ந்து இந்திய சமுதாயத்தின் நலனை காப்பதிலும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிலும் தனித்துவம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

   டெங்கில் தொகுதி குறித்தும் இத்தொகுதியில் இந்தியர்களின் நலனும் அவர்களின் தேவைகளும் எவ்வாறு ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்தும் அதன் ஒருங்கிணைப்பாளர் ஜஹி போர்ஹான் அமான் ஷா “சிலாங்கூர் இன்று”க்காக பகிர்ந்துக் கொண்டார்.அவரது விளக்கமும் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளும் விரிவாக இங்கு பதிவு செய்யப்படுகிறது.


Pengarang :