NATIONAL

சார்லஸ் சாந்தியாகோ: தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும்???

கிள்ளான், ஏப்ரல் 18:
வாக்காளர்களுக்கு தெரியாமலேயே  அல்லது அவர்களது அனுமதி இல்லாமலேயே  வாக்களிப்பு இடம் மாற்றப் பட்டுள்ளதை அறிந்து மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர் கிள்ளான் நாடாளுமன்ற வாக்காளர்கள்.
பொதுத்தேர்தலை முன்னிட்டு, அண்மையில் தேர்தல் ஆணைய வலைதளத்தில் வாக்களிப்பு விவரங்களை சரிபார்க்கும் போது தங்களுக்கு அறியாமலே வாக்களிப்பு இடம் மாற்றப் பட்டுள்ளதாக தம்மிடம் தெரிவித்ததாக முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.
இதனைத் தொடர்ந்து,  இன்று காலை 11 மணிக்கு   பாதிக்கப்பட்ட அந்த  வாக்காளர்களுடன் இணைந்து ஜனநாயக செயல் கட்சி உறுப்பினருமான  சார்ல்ஸ் தேர்தல் ஆணையத்திற்கு சென்றிருந்தார். பாதிக்கப்பட்டோரின் விவரங்ககள் கீழ் வருமாறு :-
1) லூ சூக் வேய், 68, முன்னாள் கோத்தா ஆலாம் ஷா சட்ட மன்றம்  மற்றும் கிள்ளான்  நாடாளுமன்ற தொகுதி வாக்காளரான அவர், காமுன்திங்  சட்டமன்ற   மற்றும் தைப்பிங், பேராக்  நாடாளுமன்ற தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். இது அவர் குடியிருக்கும் இடத்தை விட மிக தூரமாகும். இவர் 30 வருடங்காலமாக கிள்ளான் தொகுதி வாக்காளராக உள்ளார். இதேபோல், அவரது கணவர், மகள் மற்றும் மருமகனும் பேராக்கிற்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
2) யூஜின் ஆலிவர், 25, வாக்காளராக தன்னை இதுவரை பதிந்ததில்லை, இருந்த போதிலும், அவர் பெயர் காமுன்திங்  சட்டமன்ற மற்றும் தைப்பிங் நாடாளுமன்றத்தில் பதிய பட்டுள்ளது.
3) ரஷ்யாவில் பயிலும்  22 வயது மாணவரும் தன்னை பதிந்துந்துக் கொள்ள எந்தவொரு பாரமும்  பூர்த்தி செய்யவில்லை என்றாலும் தனது பெயர் வாக்காளாராக பதிய பட்டுள்ளது.
4) மறுபுறம் சர்குனன் தமிழ் செல்வன், 26, என்பவர், தனது அடையாள அட்டையில் அச்சிடப்பட்ட  முகவரியும் அதன் சிப்பில் உள்ள முகவரியும் மாறுபட்டுள்ளதாகக் கூறினார். மேலே கூறப்பட்டது  போலவே, இவருடைய பெயரும் காமுன்திங்  சட்டமன்ற மற்றும் தைப்பிங் நாடாளுமன்றத்தில் பதிய பட்டுள்ளது.
இந்த விவகாரங்களுக்கு  ஒரு விளக்கத்தைத் கோரி  தேர்தல் ஆணைய தலைவர் மற்றும் ஜேபிஎன் இன் இயக்குனருக்கு நான் கடிதம்  அனுப்பியுள்ளேன் என கூறிய சார்ல்ஸ், இடமாற்றப்பட்ட முகவரிகளின் விவரங்களை அந்தந்த வாக்காளர்களின் கோரிக்கைகளின் ஆதாரங்களை காட்டும்படியும் கேட்ட  போது எந்தவொரு பதிலும் வரவில்லை என்றார் அவர்.
இதற்கு பதிலளிக்கவும் ஆதாரங்களை காண்பிக்கவும்  அவர்களுக்கு வெள்ளிக்கிழமை வரை நாங்கள் நேரம் கொடுத்துள்ளோம் என செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் கூறினார் சார்ல்ஸ்.
இது போன்று இதுவரை  ஏறக்குறைய 8 புகார்கள் வந்துள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். இது போன்ற மாற்றங்களை பொதுமக்கள் சந்திக்க நேரிட்டால் தன் அலுவலகத்திடம்  தகவல் தெரிவிக்கும் படி வலியுறுத்தியுள்ளார் சார்ல்ஸ்.
அதே சமயம், உங்கள் நண்பர்களையும்  குடும்பத்தினர்களையும்  தங்களது  வாக்களிப்பு நிலையை சரிபார்க்க நினைவுறுத்துங்கள். இந்த தேர்தல் நியாமானதாகவும் நேர்மையானதாகவும் நடக்க வேண்டுமெனில் நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் தேர்தல் நாளன்று தேர்தல் மோசடிகளை தடுக்க   வாக்கு சாவடி மற்றும் வாக்கு  எண்ணும் முகவர்  தன்னார்வளராக உங்களை  பதிந்துக் கொள்ளுங்கள்.
மிக முக்கியமாக, பெரிய எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும். இப்போது மாற்றத்திற்கான நேரம்.  நாம் அனைவரும் கைகோர்த்து  ஒன்றாக மலேசியாவில் மாற்றத்தை ஏற்படுத்துவோம். ஒரே சின்னம், ஒரே நம்பிக்கை.

Pengarang :