SELANGOR

செமிஞ்செ மக்கள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டனர்

செமிஞ்செ, ஏப்ரல் 4:

மாநிலத்தின் பொருளாதார வளத்தை பெருக்குவதோடு மக்களின்நலனையும் அவர்களின் வளர்ச்சியும் மேம்பாட்டையும் சிறந்த நிலைக்கு கொண்டுசெல்லும் இலக்கோடு பணப்பதுதான் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசங்கத்தின் பெரும் கடமை. அந்நிலையில், மக்களால்தேர்வு செய்யப்பட்ட சிலாங்கூர் மாநிலஅரசாங்கம் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலிதலைமையில் சிறந்த மாநிலமாக அதனைமுன்னெடுத்து வருகிறது.

மாநில வளர்ச்சி என்பது மக்களின் பெரும்பங்களிப்பும் திறன் மிக்க ஆற்றலும்இல்லாமல் அஃது சாத்தியமாகாது. அவ்வகையில், மக்களால் கிடைக்கபெறும்பொருளாதார மேம்பாட்டை மக்களுக்குகேதிருப்பிக் கொடுக்கும் உன்னத அரசாகசிலாங்கூர் மாநில அரசு விளங்குவதாகவும்மாநில வளங்கள் மூலம் கிடைக்கும்மூலதனத்தை “பரிவு மிக்க மக்கள்நலத்திட்டங்கள்” மூலம் அதனை மீண்டும்மக்களுக்கே திருப்பிக் கொடுக்கும் அரும்பணியை டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின்அலியும் சிலாங்கூர் மாநில அரசாங்கமும்விவேகமாக மேற்கொண்டு வருவதாகசெமிஞ்செ சட்டமன்றத் தொகுதிஒருங்கிணைப்பாளர் அமிடி  ஹசான்தெரிவித்தார்.

மாநில அரசாங்கம் அமல்படுத்தியிருக்கும்48 பரிவு மிக்க திட்டங்களும் (ஐ.பி.ஆர்) குறிப்பிட்ட ஒரு வர்க்கத்திற்காக அல்ல. மாறாய்,சிலாங்கூர் மாநிலத்தின் ஒவ்வொருகுடிமகனுக்கும் உகர்ந்தது. இங்கு ஏற்றத்தாழ்வு இல்லை. முந்தைய அரசு  போல்மேல்தட்டு மக்களுக்காகவும் குறிப்பிட்ட ஒருகுழுவிற்காகவும் இங்கு எதுவுமில்லை. தகுதியானவர்களுக்கு வாய்ப்பு எனும்வெளிப்படையாக போக்கு சிலாங்கூர்அரசாங்கத்தின் மீது தொடர்ந்துஅதிகரித்துக் கொண்டிருப்பதாகவும் அவர்கூறினார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின்ஒவ்வொரு நகர்வையும் இன்றைய சூழலில்மக்கள் நன்கு கண்காணித்துவருகிறார்கள்.அரசாங்கத்தின்திட்டங்களையும் செயல்பாடுகளையும்அவர்கள் மிகவும் துள்ளியமாக மதிப்பீடும்  செய்கிறார்கள். மக்களிடையே இனி வெற்றுவாக்குறுதிகளோ அல்லது அவர்களின்உணர்ச்சியை தூண்டி ஆதரவு திரட்டும்செயல்பாடுகளோ வெற்றியடையாது.அந்தஅளவிற்கு மக்களுக்கு அரசியல்விழிப்புணர்வையும் மக்களின்உரிமையையும் சிலாங்கூர் மாநிலஅரசாங்கம் நன்முறையில் எடுத்து சொல்லிவிட்டதே அதற்கு பெரும் காரணியம் என்றார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் அனைத்துமதத்தையும் மதிக்கிறது. அனைத்துஇனத்தின் உணர்வுகளையும் மதிக்கிறது. அந்நிலையில், அதன் ஒவ்வொரு திட்டமும்இனம், மதம் கடந்து சிலாங்கூர் வாழ் மக்கள்அனைவருக்குமான உகர்ந்த திட்டமாகஉயிர்ப்பித்துள்ளது. நாட்டின் இன்றைய

பொருளாதார நிலையோடு ஒப்பிடுகையில்மக்களின் அன்றாடா வாழ்வியல் பெரும்அழுதத்திற்கு இடையில்தான் நகர்ந்துக்கொண்டிருக்கிறது.

ஆனால், சிலாங்கூரில் மக்களின் இந்தஅழுத்தமான நிலையை போக்கவும்தொடர்ந்து சிலாங்கூர் வாழ் மக்கள்பொருளாதார சுமையில் சிக்கிஎன்பதற்காகவே மாநில அரசிஅவர்களின்வாழ்வாதாரம் பாதிக்ககூடாது ன் பரிவு மிக்கதிட்டங்கள் ஆக்கப்பூர்வமாகமேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கூறினார்.ஸ்மார்ட் பேருந்து, பெடுலி சிஹாட்மருத்துவ அட்டை, அன்புத் தாய் விவேகஅட்டை (கிஸ்), என தொடரும் 48 திட்டங்களும்சிலாங்கூர் வாழ் மக்களை பொருளாதாரரீதியிலும் அவர்களின் வாழ்வாதாரநிலையிலும் ஆக்கப்பூர்வ பங்களிப்பினைவழங்குகிறது என்றும் கூறிய அவர்சிலாங்கூர் மாநிலத்தை போல் வேறுஎந்தவொரு மாநிலத்திலும் மக்களுக்காகஇம்மாதிரியான விவேகமான பரிவு மிக்கதிட்டங்கள் இல்லை என்றார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின்இத்திட்டங்களை கண்கூடாக பார்க்கும்வெளி மாநில வாசிகள் தத்தம்மாநிலங்களிலும் இம்மாதிரியானதிட்டங்கள் இல்லையே என்றுஏங்குவதையும் நம்மால் உணரவேமுடிகிறது. இன்று சிலாங்கூரில் இருக்கும்ஒவ்வொரு திட்டமும் நாடு முழுவதும்உயிர்ப்பிக்க வாய்ப்பு இருப்பத்தையும் நாம்மறுத்திட முடியாது. இன்றைய சூழலில்மக்கள் மலேசியாவில் மற்றுமொருமாபெரும் அரசியல்  மாற்றத்திற்கு தயாராகிவருவதால்  புத்ரா ஜெயாவை நாம்கைப்பற்றினால் சிலாங்கூர் மாநில அரசின்பரிவு மிக்க திட்டங்கள் நாடு முழுவதும்உயிர்ப்பிக்கும் சாத்தியத்தைகொண்டிருப்பதாகவும் பெரும்நம்பிக்கையோடு அவர் கூறினார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின்செயல்பாடுகளும் மக்களுக்கான நன்திட்டங்களும் மக்களின் பெரும் வரவேற்பைபெற்றதோடு அஃது மாபெரும் மாற்றத்திற்குமக்களை ஆயத்தமாக்கி விட்டது. நாட்டின்14வது பொதுத் தேர்தல் செமிஞ்செமக்களின் விவேகம் இச்சட்டமன்றத்தைகைப்பற்ற பெரும் பங்காற்றுவதோடு புத்ராஜெயாவையும் வெற்றிக் கொள்ள அஃதுவழிகோலும் என்றார்.


Pengarang :