NATIONAL

நாடாளுமன்ற கலைக்கப்படுவது எதிர்பார்த்த ஒன்று; புக்கிட் லஞ்சான் தயாராக உள்ளது!!!

ஷா ஆலம், ஏப்ரல் 6:

நாளை நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் அறிவிப்பு செய்தது எதிர்பார்த்த ஒன்று என்று புக்கிட் லஞ்சான் சட்ட மன்ற உறுப்பினர் எலிசபெத் வோங் கூறினார். 14-வது பொதுத் தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே தேர்தல் பணிகளை முடுக்கிவிடப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

”  புக்கிட் லஞ்சான் சட்ட மன்றத்தை பொறுத்தவரை, கடந்த பிப்ரவரி மாதத்தில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்த தேர்தல் எந்திர நடவடிக்கை அறை தயாராக உள்ளது. நாம் தேர்தலை எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம். பொது மக்கள் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியை ஆதரிக்க தயாராக இருக்கின்றனர்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரான எலிசபெத் வோங் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் கீழ் செயல்படும் மாநில அரசாங்கம் சிறந்த அடைவு நிலையைக் கண்டு பெருமிதம் கொள்வதாகவும் தெரிவித்தார்.

 

 

 

 

 

 


Pengarang :