SELANGOR

மாநில ஆட்சியில் ஒருமைப்பாடு

ஷா ஆலம், ஏப்ரல் 17:

தலைவர்கள் மத்தியிலும் மாநில அரசு ஊழியர்கள் மத்தியிலும் ஆழமாய் உயிர்க்கொண்ட ஒருமைப்பாட்டினால் மாநில அரசாங்கத்தின் ஆட்சியும் அதன் செயல்பாடுகளும் ஆக்கப்பூர்வமானதாகவும் சரியான இலக்கில் வெற்றியை நோக்கியும் பயணித்ததாகவும் கூறிய சுஹாய்மி ஷஃப்பி இவை எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரும் நில குத்தகை,வேண்டியவர்களுக்கு நிலத்தை ஒதுக்குதல்,மேம்பாட்டு திட்டங்களை வழங்குதல் போன்ற நிலவிவகாரங்களில் தலையிடாமல் அவை நேர்மையான முறையில் இயங்குவதற்கு வழி வகுத்தது என்றார்.

ஆனால்,பாக்காத்தான் அரசாங்கம் பின்பற்றிய இந்த முன்மாதிரிகளை தேசிய முன்னணி அரசாங்கம் இதற்கு முன்னர் கொண்டிருக்கவில்லை.மாநிலத்தின் அனைத்து நிலவிவகாரங்களிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது அரசியல்வாதிகளின் தலையீடு அதிகமாக இருந்ததாகவும் சுட்டிக்காண்பித்தார்.

தேசிய முன்னணிக்கு பாக்காத்தான் அரசாங்கம் முன்மாதிரியாக திகழ்வதாகவும் கூறிய அவர் சட்டமன்றத்திலும் அவர்களுக்கு முழு சுதந்திரமும் உரிமையும் வழங்கப்பட்டத்தையும் சுட்டிக்காண்பித்தார்.சிலாங்கூர் மாநிலத்தின் இப்போக்கு அனைத்து தரப்பிற்கு படிப்பினையாகவும் கற்பிப்பாகவும் அமைந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

மாநில அரசாங்கத்தின் இப்போக்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி மாநில அரசாங்கத்தின் துணை நிறுவனங்களுக்கும் அஃது பொருந்தியிருந்ததாகவும் கூறினார்.இருப்பினும் சிறந்த ஒன்றை உருவாக்குவதற்கும் அமல்படுத்துவதற்கும் நாம் கடுமையாக உழைக்க வேண்டியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.இம்மாதிரியான சிறந்தவற்றை உருவாக்குவதில் சவால்கள் அதிகம் என கூறிய அவர் அரசியல் நிலையில் நீண்டக்கால செயல்பாடுகளை முன்னிறுத்தி அதனை செம்மையாக செய்து முடிக்க வேண்டியிருந்ததாகவும் கூறினார்.


Pengarang :