SELANGOR

மூன்று ஆண்டுகளில் ஹிஜ்ரா திட்டத்தில் 52,000 வணிகர்கள்

  மாநில அரசாங்கம் அமல்படுத்திய ஹிஜ்ரா மைக்ரோகிரெடிட் திட்டம் மாநிலத்தின் பெருமை சொல்லும் திட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது.இத்திட்டம் தொடங்கப்பட்டு மூன்றாண்டுகளில் இதுவரை சுமார் 52,000 பேர் பயன்பெற்றிருப்பது அதற்கு தக்க சான்று.

மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் சிந்தனையில் உதிர்த்த இத்திட்டம் சிறு வணிகர்களின் சேமிப்பாகவும் கடனுதவியாகவும் செயல்படது குறிப்பிடத்தக்கது.தங்களின் வியபாரத்தை மேம்படுத்தவும் விரிவுப்படுத்தவும் அவர்களுக்கு இந்த ஹிஜ்ரா கடனுதவி பெரும் பங்காற்றியது என்பது மறுத்திட முடியாதவை.

மாநில அரசாங்கம் உருவாக்கிய இத்திட்டம் முதலீடு இல்லாமல் தவிக்கும் வியபாரிகளுக்கும் தொழிலை விரிவாக்கம் செய்ய முதலீடு இல்லாமல் தவிக்கும் சிறுரக வணிகர்களுக்கும் வியபாரிகளுக்கும் காலத்திற் உகர்ந்த திட்டமாக கைகொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.அவர்களின் சுமையை குறைக்கவும் கூடுதலான வருமானம் கிடைக்கவும் வேண்டிதான் மாநில அரசாங்கம் வெ.100 மில்லியனை ஒதுக்கியுள்ளது.

மாநில அரசாங்கத்தின் இத்திட்டம் மக்களை ஏழ்மை நிலையிலிருந்து மேல்மட்ட நிலைக்கு உயர்த்து சூழலையும் ஏற்படுத்துவதாக இந்த மூன்றாண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டவர்கள் மாநில அரசாங்கத்தின் இத்திட்டத்தை பெரிதும் வரவேற்பதாக ஹிஜ்ராவின் தலைமை நிர்வாகி டத்தோ டாக்டர் மன்சோர் ஓத்மான் கூறினார்.

சிறுரக வணிகர் மற்றும் வியபாரிகளுக்கு வளர்ச்சியையும் மேம்பாட்டையும் ஏற்படுத்தியிருக்கும் ஹிஜ்ரா பல்வேறு நிலைகளில் அவர்களின் வெற்றிகரமான வியபாரத்திற்கு வழி செய்திருப்பதாகவும் கூறினார்.மூன்றாண்டில் நமது இலக்கு 56,000 பேராக இருந்த நிலையில் தற்போதைக்கு அஃது 52,000ஐ எட்டியுள்ளது.நமது இலக்கிற்கு இன்னும் 4000 பேர் தேவைப்படுவதாகவும் கூறினார்,

இதுவரை இத்திட்டத்தின் கீழ் சுமார் 52,000 பேர் வெ.369 மில்லியனை கடனாக பெற்று வியபாரத்தை மேம்படுத்தியிருப்பதாக கூறிய அவர் ஹிஜ்ரா திட்டத்தில் பங்குபெறும் ஒவ்வொருவரின் வளர்ச்சியையும் நன்கு கண்காணிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.ஹிஜ்ரா திட்டத்தில் வெ.5000 முதல் வெ.50,000வரை கடனுதவியை பெற முடியும் என்றும் கூறிய அவர் இத்திட்டத்தின் கீழ் சிறுரக வணிகர்களும் வியபாரிகளும் தங்களின் வியபாரத்தில் தனித்துவ் அவளர்ச்சியையும் மேம்பாட்டையும் எட்டுவதை பார்க்கும் போது காலத்திற்கு ஏற்ற திட்டம் தான் என்பதை அது உறுதி செய்கிறது.

  சிலாங்கூர் வாழ் வியபாரிகளின் வாழ்வியலை அடுத்தக்கட்டத்திற்கு இட்டுச் செல்லும் ஹிஜ்ர திட்டம் இவ்வாண்டுக்குள் 56,000 பேர் எனும் இலக்கை எட்டி விடும் என்றார்.நன்மை அளிக்கும் இத்திட்டத்தில் பங்கு பெற்று வியபார ரீதியில் வெற்றியை எட்டுவதற்கு முனைப்புக்காட்டவும் வேண்டும் என்றார்.

கடன் பெற்றவர்கள் 80 விழுகாடு திருப்பி செலுத்தியுள்ளனர்

இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்றவர்கள் சுமார் 80 விழுகாடு அக்கடனை திருப்பு செலுத்தியுள்ளனர்.இந்த மூன்றாண்டில் அது சாத்தியமானதாக கூறிய டாக்டர் டத்தோ மன்சோர் கடனை திருப்பி செலுத்தியதன் வாயிலாக தொடர்ந்து இத்திட்டம் அதன் இலக்கை அடைந்து வருவது உறுதி செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.

கடன் பெற்றவர்கள் அதனை திருப்பிக் கொடுக்க முன் வரும் வேளையில் சிலர் இதனை ஒரு பொருட்டாகவும் கருதுவதில்லை.அம்மாதிரியான சூழலில் கடனை வசூலிப்பதில் ஹிஜ்ரா பணியாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கினாலும் விவேகமான முறையில் அவை வசூல் செய்யப்படுவதாகவும் கூறினார்.

ஹிஜ்ரா திட்டம் வெற்றிகரமாக நகரும் சூழலில் சிலாங்கூர் மாநில ஹிஜ்ரா கடனுதவி திட்டம் ஆக்கப்பூர்வமானதாகவும் விவேகமானதாகவும் மட்டுமின்றி நன்மையை ஏற்படுத்தும் திட்டமாகவும் விளங்குவதை கண்கூடாக காணமுடிகிறது என்றார்.மேலும்,ஹிஜ்ரா சிலாங்கூர் வியபாரிகளை நிபுணத்துவம் சார்ந்து உயர்த்தவும் அவர்களுக்கு தேவையான பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும் ஹிஜ்ரா கூட்டுறவுக்கழகத்தின் துணையோடு முன்னெடுத்தும் வருகிறார்கள்.ஹிஜ்ரா முன்னெடுக்கும் ஒவ்வொரு செயல்பாடுகளும் பங்கேற்பாளர்களின் அணுகுமுறையாலும் ஆர்வத்தாலும் சரியான இலக்கை நோக்கி நகர்வதாகவும் கூறினார்.

இதற்கிடையில்,வியபாரிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக ஹிஜ்ரா சிலாங்கூர் பெருநாள் காலத்து கடனுதவியையும் அறிமுகம் செய்திருப்பதாகவும் கூறிய டாக்டர் டத்தோ மன்சோர் இது பெருநாள் காலங்களில் அவர்களின் வியபாரங்களுக்கு கூடுதல் முதலீடாகவும் விளங்கும் என்றார்.

ஜிரோ டூ ஹீரோ திட்டம்

ஒவ்வொரு வியபாரியின் செயல்பாடுகளையும் கண்காணிக்கவும் அவர்களை வியபார ரீதியில் உயர்த்தவும் ஹிஜ்ரா சிலாங்கூர் ஆற்றலும் திறனும் மிக்க சில நிறுவனங்களை ஹிஜ்ரா அடையாளம் கண்டிருப்பதாகவும் இதன் மூலம் இத்திட்டத்தில் பங்கேற்கும் வியபாரிகளை “ஜீரோ டூ ஹீரோ” எனும் நிலைக்கு உயர்த்துவதாகவும் கூறினார்.

ஹிஜ்ரா திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிறுவனங்கள் சம்மதப்பட்ட வியபாரிகளுக்கு பயிற்சிகளும் வழிகாட்டல்களையும் வழங்கும் கடமையை கொண்டிருப்பார்கள்.வரையறுக்கப்பட்ட காலத்திற்கு அஃது நடைபெறும் என்றார்.அதேவேளையில்,சம்மதப்பட்ட நிறுவனங்களிலிருந்து அத்தியாவசிய வியபார பொருட்கள்,உட்பட பல்வேறு உதவிகளும் கடன் திட்டங்களும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்,சிறுரக வணிகர்களும் வியபாரிகளும் தொடர்ந்து வெற்றிகரமாக வியபாரத்தை நன்நிலைக்கு உயர்த்தவும் அதனை சரியாக நகர்த்தவும் வழிக்காட்டியாகவும் ஆலோசனையாளராகவும் ஹிஜ்ரா விளங்குகிறது என்றார்.மேலும்,கடனை முழுமையாக திருப்பி செலுத்திய வியபாரிகள் தங்களின் வியபாரத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு ஹிஜ்ராவில் மீண்டும் கடனுதவி பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஒவ்வொரு வியபாரியின் முன்னேற்றமும் வளர்ச்சியும் ஹிஜ்ரா திட்டத்தின் வெற்றிக்கு பெரும் அளவுக்கோல் என்றும் டாக்டர் டத்தோ மன்சோர் பெருமிதமாக கூறினார்.


Pengarang :