SELANGOR

12வது பொதுத் தேர்தலுக்கு பின்னர் –பொருளாதார செழிப்பை மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர்!!

ஷா ஆலாம், ஏப்ரல் 4:

    சுமார் 50 ஆண்டுகளாய் சிலாங்கூர்மாநிலத்தை ஆட்சி செய்த

நிலையிலும் மத்திய அரசாங்கத்தோடு கைகோர்த்துநாட்டின் பொருளாதாரத்தில் பங்குவகித்திருந்தாலும் சிலாங்கூர் மாநிலத்தில் அம்னோ – தேசிய முன்னணியின் ஆட்சியில்அதன் வருவாய் இருப்பு வெறும் வெ.400 மில்லியன் தான் என்பதுவேதனைக்குரியது. சிலாங்கூர் மாநிலத்தைபாக்காத்தான் அரசாங்கம் மார்ச் 2008இல்கைப்பற்றியது போது சிலாங்கூர் மாநிலகையிருப்பு இவ்வளவுதான் இருந்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது.

   சிலாங்கூர் மாநிலம் போன்ற வளர்ச்சியும்மேம்பாடு கொண்ட மாநிலத்தில் இறக்குமதிமுதலீடு மற்றும் அரசு ஊழியர் ஊதியம்ஆகியவற்றை ஈடுக்கொடுக்கும் நிலையில்வெ.400 மில்லியன் என்பது பெரும்சாதனையும் இல்லை. அஃது போதுமானகையிருப்பும் இல்லை என்பதுதான்உண்மை.

  ஒவ்வொரு ஆண்டும் மாநில கையிருப்பைஅதிகரிப்பதில் தோல்வியுற்ற மாநிலஅம்னோ – தேசிய முன்னணி  அரசாங்கம்அதன் ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டின்ஒதுக்கீடு செலவினம் வெ.2 பில்லியனைகூட எட்டாதது வேடிக்கையாகவும்நிர்வாகத்திறன் அற்ற போக்கையும்தெள்ளத் தெளிவாகவே காட்டுகிறது.

   மாநில வருவாயை மக்களுக்குபயன்படுத்துவதில் கருமிப்போக்கைகடைபிடித்தும் அம்னோ – தேசிய முன்னணிஅரசாங்கம் மாநில கையிருப்பைஅதிகரிப்பதில் பெரும் தோல்வியைசந்தித்துள்ளது என்பதை மட்டும் நம்மால்மிக தெளிவாய் புரிந்துக் கொள்ளமுடிகிறது.இதற்கிடையில்,மாநில அரசாங்கமேம்பாட்டு நிதி அறிக்கைகூட 2017ஆம்ஆண்டுகான கையிருப்பைவெ.59.1மில்லியன் என்றுதான் பதிவுசெய்துள்ளது.

   மேலும்,நாட்டின் பொருளாதாரசெழிப்பினை கடந்த 2000ஆம் ஆண்டுகளில்அனுபவித்த நிலையில் கூட சிலாங்கூர்மாநிலத்தின் அம்னோ – தேசிய முன்னணிஅரசாங்கம் மத்திய அரசிடமிருந்து வெ.200 மில்லியனை ரொக்கமாகவும் வருடாந்திரதொகையாக வெ.75 மில்லியனையும்நீண்டக்கால ஒப்பந்தத்தின் அடிப்படையில்பெற்றுள்ளது.அஃது 4,931 ஏக்கர் நிலத்தில்புத்ரா ஜெயாவை மேம்பாடு ஒப்பந்தத்தைசார்ந்த ரீதியிலானது என்பதுகுறிப்பிடத்தக்கது.

அம்னோ – தேசிய முன்னணியின் கீழ்சிலாங்கூர் மாநிலம் அதிகபட்ச திறனைண்டிருக்கவில்லை.

    நாட்டின் பொருளாதார மேம்பாட்டில்தொடக்கத்திலிருந்தே சிலாங்கூர் மாநிலம்முக்கிய பங்காற்றி வருவதை மறுத்திடமுடியாதுதான். ஆனால், இம்மாநிலம்அம்னோ – தேசிய முன்னணியின் கீழ் அதன்அதிகபட்ச திறனை கொண்டிருக்கவில்லைஎன்பது உண்மை. இம்மாநிலத்தின்வளங்கள் மூலம் அதன் சிறந்த பொருளாதாரமேம்பாட்டை எட்டுவதற்கு சிலாங்கூர்மாநிலம் தவறிவிட்டது எனலாம்.

  அன்றையக்காலக் கட்டத்தில் சிலாங்கூர்மாநில அரசுக்கு மத்திய அரசு நேரடிபொருளாதார உதவிகளை செய்தும்இம்மாநிலம் அதிகபட்ச திறனை எட்டாததுவேடிக்கையானது.இன்றைய மாநில அரசைமத்திய அரசு புறக்கணித்துஓரங்கட்டினாலும் முந்த அரசினை காட்டிலும்நடப்பில் சிலாங்கூர் மாநிலம் பொருளாதாரரீதியில் துரித வளர்ச்சியையும்மேம்பாட்டையும் எட்டியுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

  கடந்த 2008ஆம் ஆண்டுக்கு முன்னர்எதிர்கட்சியினர் பலவீனமாக இருந்தநிலையால் அப்போதைய மாநில அரசாங்கம்வெளிப்படையாகவே துணிந்து தங்களின்அலட்சியப் போக்கை மாநில பொருளாதாரமேம்பாட்டில் கவனம் செலுத்தாமல்கடைபிடித்து வந்தனர். மேலும், அன்றையகாலக்கட்டத்தில் மக்களின் பொருளாதாரமேம்பாட்டிலும் அவர்களின் வாழ்வாதாரம்குறித்தும் கவலைக் கொள்ளாமல்கைவிடப்பட்ட நிலையில் குறிப்பிட்டமேல்தட்டு மக்களின் பயன்பாட்டிற்கே மாநிலசெல்வங்களும் வளங்களும்பயன்படுத்தப்பட்டது.

   இன்றைய விவேகமான மாநிலஅரசாங்கத்தின் செயல்பாடு மற்றும் திறன்மிக்க போக்குடன் ஒப்பிடுகையில் முந்தஅம்னோ தேசிய முன்னணி அரசாங்கம்மக்களுக்கு எவ்வித பரிவு மிக்கதிட்டங்களையும் முன்னெடுக்கும்முயற்சியினை மேற்கொள்வதில்அக்கறைக்காட்டவில்லை என்பதுபுலப்படுகிறது. இன்றைய பாக்காத்தான்அரசாங்கம் மக்களுக்காக பரிவு மிக்கதிட்டங்களை அறிமுகம் செய்து சிலாங்கூர்வாழ் மக்கள் பெரும் நன்மைகளை அடைந்துவருவதை  கண்கூடாக காணமுடிகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

 30 ஆண்டுகளில் சிலாங்கூர் மாநிலத்திற்குவெ.30 பில்லியன் இழப்பு

  சிலாங்கூர் மாநிலம் அம்னோ – தேசியமுன்னணி ஆட்சியில் சுமார் 30 ஆண்டுகளில்30 பில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளது. அதுஅவர்கள் அதிகாரத்திலிருந்த போதுஒருமைப்பாடுடன் விவேகமாகவும்செயல்படாமல் அலட்சியத்துடன் வீண்செலவு செய்ததன்விளைவு.இம்மாநிலத்தின் சொத்துடமைகுறித்த கூட்டு முயற்சியின் தோல்வியால் 30 ஆண்டுகளில் 30 பில்லியன் இழப்பைமாநில அரசு ஏற்றுக் கொண்டதை 2009ஆம்ஆண்டுகான மாநில பட்ஜெட்டின் மூலம்கண்டறிய முடிந்தது.

   இந்த இழப்பிற்கு மாநில அரசாங்கம்கூட்டுமுயற்சியின் மூலம் மேம்பாடுகளைகொண்டு வருவதற்காக நிலத்தைஇலவசமாக வழங்கி அதன் மூலம் லாபம்பெறுதல் மற்றும் மாநில அரசாங்கமேமேம்பாட்டு நடவடிக்கையினைமேற்கொண்டது ஆகிய ரீதியில் அவைஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

   சிலாங்கூர் மாநிலத்தை மிகவும் சிறந்தமுறையிலும் நன் வகையிலும்விவேகமாகவும் சரியான நோக்குடனும்நேர்மையாகவும் அதேவேளையில்சிங்கப்பூரை போன்று ஊழல் மற்றும் லஞ்சம்இல்லாமல் நிர்வகித்தால் இன்று கிடைக்கும்வருமானத்தை காட்டிலும் நான்கு மடங்குபொருளாதாரத்தை உயர்த்த முடியும் என்பதுதின்னம்.

ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் சூழல் மாறியது

  கடந்த 2008ஆம் ஆண்டில் சிலாங்கூர்மாநிலத்தை பாக்காத்தான் அரசாங்காம்கைப்பற்றியவுடன் மாநில மக்கள் மாநில  வருமானத்தை அனுபவிக்கும் சூழல்ஏற்பட்டது.மாநில வருமானத்தின் பெரும்பகுதி மாநில அரசின் பரிவு மிக்க திட்டத்தின்கீழ் மக்களுக்கே செலவிடப்பட்ட போதிலும்மாநிலத்தின் கையிருப்பு தொடர்ந்துஅதிகரித்துக் கொண்டே போகிறது.

   தொடர்ந்து 2009ஆம் ஆண்டு முதல்சிலாங்கூர் மாநிலத்தின் வருவாயும்கையிருப்பும் படிப்படியாகவும் சீராகவும்உயர்ந்து வருவதாக மாநில முன்னாள் நிதிநிர்வாகி டத்தோ நோர்டின் சுலைமான்குறிப்பிட்டுள்ளார் என்பதை நினைவுக்கூறவேண்டியுள்ளது. மாநிலத்தின் கையிருப்பு2009ஆம் ஆண்டில் 1.3 பில்லியனை எட்டிவேளையில் 2010ஆம் ஆண்டில் அஃது 1.58 பில்லியனாக உயர்ந்தது.

      அவை தொடர்ந்து அடுத்தடுத்தஆண்டுகளில் வெ.1.944 பில்லியனாக2011ஆம் ஆண்டும்,2012இல் வெ.2.6 பில்லியனாகவும், 2013ஆம் ஆண்டில்  வெ.2.9 பில்லியனாகவும் 2014இல் வெ.3.2 பில்லியனாகவும், 2015இல் வெ.3.3 பில்லியனாகவும்  உயர்ந்து 2017ஆம் ஆண்டுஅக்டோபரில் அஃது வெ.4.1 பில்லியனாகவும் உயர்ந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.

   சிலாங்கூர் மாநிலத்தில் தொடர்ந்து அதன்கையிருப்பு அதிகரிக்க மாநில அரசாங்கம்மேற்கொண்ட நிர்வாகத்திறன் தான் பெரும்காரணியம். மேலும், மக்களுக்கு நன்மைஅளிக்காத எந்தவொருநடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம்கொடுக்கப்படாததும் அதில் அடங்கும்.

   சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான்அரசாங்கத்தின் ஆட்சியில் 31 ஜூலை 2017 வரை சுமார் வெ.2.6 பில்லியனை மக்களின்நலனுக்காக மக்களுக்கான பரிவு மிக்க 47 நன் திட்டங்களுக்காகபயன்படுத்தப்பட்டிருப்பது என்பதுகுறிப்பிடத்தக்கது.


Pengarang :