NATIONAL

14-வது பொதுத் தேர்தல்: கெஅடிலான் இளம் தலைவர்களை களம் இறக்கும்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 7:

எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் முற்போக்கு கட்சியான  மக்கள் நீதிக்கட்சி (கெஅடிலான்) தலைசிறந்த இளம் தலைவர்களை களம் இறக்க தயாராக உள்ளது என்று கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் வேட்பாளர்கள் தொழில்முறை, திறன்மிக்க மற்றும் சிறந்த அடைவு நிலையைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று விவரித்தார்.

”  மறுமலர்ச்சி சித்தாந்தங்களை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் கெஅடிலான் கட்சி பலம் பொருந்திய, தொழில்முறை மற்றும் திறன்மிக்க வேட்பாளர்களை களம் இறக்கும். நமக்கு நிறைய இளம் வேட்பாளர்கள் உள்ளனர். ஆகவே, வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறை மிக நேர்த்தியான முறையில் செயல்படுத்தப்படும்,” என்று கெஅடிலான் கட்சியின் உச்ச மன்றக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், சில சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற  உறுப்பினர்களின் தொகுதிகள் மாற்றம் செய்யப்படுவது தொடர்பில் பேசப்பட்டதாக அஸ்மின் அலி கூறினார். கெஅடிலான் கட்சியின் தொகுதி பங்கீடுகள் கூடிய விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று தெளிவுபடுத்தினார்.


Pengarang :