NATIONAL

14-வது பொதுத் தேர்தல் பிரசாரங்களில் துன் மகாதீர் படங்களை பயன்படுத்த பாக்காத்தானுக்கு எஸ்பிஆர் தடை

கோலா லம்பூர், ஏப்ரல் 4:

எந்த நேரத்திலும் நடக்கும் என்று எதிர் பார்க்கப்படும் 14-வது பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் படங்களை பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி பயன்படுத்த மலேசிய தேர்தல் ஆணையம் தடை விதிப்பதாக ஜசெகவின் அமைப்பு செயலாளர் அந்தோணி லோக் கூறினார். மலேசிய சங்க பதிவு இலாகாவின் அனுமதியை பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி பெறாத சூழ்நிலையில் தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கட்சிகள் தங்களின் தலைவர்கள் படங்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று எஸ்பிஆர் தெரிவித்துள்ளது.

” இந்தத் தடை தேவையில்லாத ஒன்று. தலைவர்களின் படங்களை பயன்படுத்துவது கட்சிகளின் உரிமை. ஏன் தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்? இது எஸ்பிஆரின் கடமை அல்ல. எஸ்பிஆர், மாநிலங்களின் மந்திரி பெசார் அல்லது முதல்வர்களின் படங்களை பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது. ஆனால், தேசிய முன்னணி ஆளும் மாநிலங்களில் எல்லா படங்களையும் விளம்பர பலகைகளில் பிரசுரம் செய்துள்ளனர்,” என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைவர்களுடன் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.


Pengarang :