NATIONAL

கருப்பு பட்டியலிருந்து 433,000 பிடிபிடின் கடனாளிகள் நீக்கம் !!

புத்ரா ஜெயா, மே 31:

பிடிபிடின் கடனுதவி பெற்று அதன் திருப்பி செலுத்தாத சுமார் 433,000 பேரை கருப்பு பட்டியலிருந்து நாட்டின் குடிநுழைவு இலாகா நீக்கம் செய்தது.கடந்த மே 24ஆம் தேதி வரும் ஜூன் 15ஆம் தேதி வரை கட்டகட்டமாக அவர்களின் பெயர்கள் கருப்பு பட்டியலிருந்து நீக்கப்படும் என கல்வி அமைச்சர் டாக்டர் மாஸ்லி மாலிக் தெரிவித்தார்.

நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் ஹராப்பான் கூட்டணி வெளியிட்ட தேர்தல் கொள்கை அறிக்கையில் வெ.4000க்கும் குறைவான ஊதியம் பெறுபவர்கள் பிடிபிடின் கடனை திருப்பி செலுத்துவது ஒத்தி வைக்கப்படும் என கூறியதை நினைவுக்கூர்ந்த கல்வி அமைச்சர் அதன் முதற்கட்ட நடவடிக்கையாக கருப்பு பட்டியலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.
இன்றைய சூழலில் நாட்டின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு கல்வி கடன் பெற்றவர்களின் ஊதியம் வெ.4000ஐ எட்டும் வரை அவர்கள் அதனி திருப்பி செலுத்த வேண்டாம் என அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறிய அவர் குடிநுழைவு இலாகாவுடன் கலந்து பேசிய பின்னர் கருப்பு பட்டியலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறினார்.இதன் மூலம் அவர்களின் பயணங்கள் எவ்விதத்திலும் தடைப்படாது என்றார்.

இன்றைய நாட்டின் பொருளாதார சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதார அழுத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே அரசாங்கம் பிடிபிடின் கடனை வசூலிக்கும் திட்டத்தை ஒத்தி வைத்ததாகவும் அவர் மேலும் கூறினார்.


Pengarang :