Sebanyak 34,090 kes demam denggi dilaporkan di Selangor dari Januari hingga 1 Ogos.
PBT

டெங்கியை ஒழிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தை எம்பிகே மேற்கொண்டது!!

கிள்ளான், மே 30:

கிள்ளான் மற்றும் அது சார்ந்த பகுதிகளில் டெங்கியை துடைத்தொழிக்க கிள்ளான் நகராண்மைக் கழகம் (எம்பிகே) சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தை மேர்கொண்டுள்ளது.இதன் மூலம் டெங்கியை தடுக்க முடியும் என நம்புவதாக அதன் தலைவர் டத்தோ முகமாட் யாசிட் பிடின் தெரிவித்தார்.
இத்திட்டத்தில் எம்பிகே-வுடன் கிள்ளான் சுகாதார இலாகா மற்றும் கிள்ளான் மாவட்ட நில இலாகா ஆகியவையும் கைகோர்த்திருப்பதாகவும் கூறிய அவர் டெங்கியை ஒழிக்கும் ஒரே இலக்கோடு சம்மதப்பட்ட இலாக்காகளோடு கைகோர்த்திருக்கும் நிலையில் எம்பிகே அதன் துரித நடவடிக்கையில் வெற்றி காண்பதோடு விவேகமாக டெங்கியை ஒழித்துக் கட்டவும் முடியும் என்றார்.

முதற்கட்டமாக ஆறு சட்டமன்ற தொகுதிகளை இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கூறிய அவர் அதில் செமெந்தா,சுங்கை பினாங் மற்றும் மேருவும் அடங்கும் என்றார்.இத்திட்டத்தின் கீழ் டெங்கி காய்ச்சலை கட்டுப்படுத்துவதோடு டெங்கி கொசுக்களின் உற்பத்தியும் கட்டுப்படுத்த முடியும் என்றார்.மேலும்,இத்திட்டத்தின் கீழ் சுகாதார இலாகா மற்றும் பொது மக்களோடு எம்பிகே நல்லதொரு உறவினை மெய்பிக்க முடியும் என்றும் அதன் மூலம் டெங்கிக்கு எதிரான இலக்கில் வெற்றி அடைய முடியும் என்றும் அவர் கூறினார்.
மேலும்,டெங்கி அபாயம் உள்ள இடங்களில் அல்லது பகுதிகளில் எம்பிகே அதன் விழிப்புணர்வு நடவடிக்கையோடு பாதுகாப்பு செயல்பாடுகளையும் தொடர்ந்து முன்னெடுக்கும்.அதேவேளையில்,பொது மக்களும் டெங்கிக்கு எதிராக விழிப்போடு இருத்தல் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும்,அந்தந்த வட்டார ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் இந்த திட்டத்தில் அவர்களின் பங்களிப்பினை செம்மையாகவும் திறன் படவும் மேற்கொள்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நாம் அனைவரும் ஒரே இலக்கோடு டெங்கிக்கு எதிராக களமிறங்கினால் இவ்வட்டாரத்தில் டெங்கியை முற்றாக துடைத்தொழிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் யாசிட் முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது


Pengarang :