NATIONAL

நாட்டின் கடனை அடைக்க “தாபோங் ஹராப்பான் மலேசியா” சிறப்பு திட்டம்

புத்ரா ஜெயா , மே 30:

நாட்டின் கடனை அடைக்கவும் நாட்டின் நிதிநிலையை வலுவாக நிலைக்கொள்ள செய்வதற்கும் “தாபோங் ஹராப்பான் மலேசியா” எனும் சிறப்பு திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக நாட்டின் பிரதமர் துன் மகாதீர் முகமது அறிவித்தார்.இத்திட்டத்தின் கீழ் மக்களிடமிருந்து நன்கொடை பெறப்பட்டு நாட்டின் கடனை அடைத்து நிதிநிலையையும் வலுபெற செய்ய முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மக்களிடையே பெறப்படும் நன்கொடைய ஒவ்வொரு மலேசியரின் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவதோடு அந்த நன்கொடை நேரிடையா நாட்டின் நிதி அமைச்சின் கீழ் சேர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.நாட்டின் நிதிநிலை படுமோசமான நிலையில் இருப்பதை அறிந்த மலேசியர்கள் நாட்டுப்பற்றோடு நன்கொடை வழங்கிட முன் வந்திருப்பதாகவும் அஃது அவர்கள் இந்நாட்டை எந்த அளவிற்கு நேசிக்கிறார்கள் என்பதை சிறந்த முறையில் புலப்படுத்துவதாகவும் அவர் மேலும் கூறினார்.
நாட்டு மக்களின் தேச உணர்வை பாராட்டுவதாகவும் அவர்கள் மத்தியில் தொடர்ந்து இவ்வுணர்வு மேலோங்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர் நாட்டிற்காக நன்கொடை வழங்க முன் வந்த மலேசியர்களுக்கு நன்றி கூறுவதாகவும் துன் மகாதீர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.மேலும்,மலேசியர்களின் நன்கொடையை வரவேற்பதாகவும் கூறினார்.
நாட்டின் கடன் 1டிரிலியன் இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் நாட்டின் மீது கவலையும் அக்கறையும் கொண்ட மலேசியர்கள் நாட்டின் கடனை அடைக்க நன்கொடை வழங்கி முன் வந்த நிலையில் நாட்டு மக்களின் உணர்வை மதித்து அரசாங்கம் இந்த “தாபோங் ஹராப்பான் மலேசியா” எனும் சிறப்பு திட்டத்தை தொடங்கியதாகவும் துன் மகாதீர் உணர்ச்சிபூர்வமாக கூறினா


Pengarang :