NATIONAL

பாக்காத்தான் அரசாங்கத்தை தேர்ந்தெடுத்து, சரியான முடிவை நாட்டு மக்கள் எடுத்துள்ளனர்

அம்பாங், மே 16:

கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில்,  அண்மையில் நடந்து முடிந்த 14-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கத்தை தேர்ந்தெடுத்து சரியான முடிவை எடுத்த மலேசிய மக்களின் தீர்ப்பை வரவேற்று நன்றி தெரிவித்தார். அதில் மிகவும் முக்கியமானது, இந்த ஜனநாயக நடைமுறை அமைதியான மற்றும் சுமூகமான முறையில் செயல்படுத்தப் பட்டது குறிப்பிடத்தக்கது.

”  இது நம் நாட்டின் சிறந்த அடைவு நிலையைக் காட்டுகிறது. கடந்த 61 ஆண்டுகளாக தேசிய முன்னணி அரசாங்கத்தை பொது மக்கள் அமைதியான முறையில் மாற்றம் செய்தனர். சரித்திரப் பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்திய மலேசிய மக்களுக்கு எனது நன்றி,” என்று அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் மைதானத்தில் நடைபெற்ற துணைப் பிரதமர் நியமனம் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது இவ்வாறு கூறினார்.

 

 

 

 

 

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் அடுத்த 100 நாட்களில் 10 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முனைப்பு காட்ட வேண்டுமென தெரிவித்தார். அதில் குறிப்பாக பொருட்கள் மற்றும் சேவை வரி அகற்றுவது மற்றும் எரிபொருள் விலையை நிர்ணயம் செய்வது போன்றவை அடங்கும் என்றார்.


Pengarang :