NATIONAL

பிரதமர் துன் மகாதீருக்கு மோடி வாழ்த்து – மரியாதை நிமித்தமாய் சந்தித்தார் !!

புத்ரா ஜெயா, மே 31:

நாட்டின் 7வது பிரதமராக பதவி ஏற்ற துன் மகாதீரை மரியாதை நிமித்தமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து தனது வாழ்த்தினை தெரிவித்தார்.நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் ஹராப்பா கூட்டணி மத்திய ஆட்சியை கைப்பற்றிய வேளையில் இந்திய பிரதமர் மோடி மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகை அளித்து தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.

காலை 11.35 மணிக்கு துன் மகாதீரை மோடி சந்தித்தார்.கடந்த 23 நவம்பர் 2015இல் மோடி மலேசியாவிற்கு வருகை அளித்திருந்த போதிலும் பிரதமர் துன் மகாதீரை சந்திப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.நாட்டின் பிரதமர் துன் மாகாதீரை சந்தித்த பின்னர் நாட்டின் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ வான் அசீசாவை அவரது கணவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமையும் மோடி சந்தித்தார்.
இச்சந்திப்பின் மூலம் மலேசியா – இந்தியா ஆகிய நாடுகளுக்கு மத்தியிலான உறவு மேலும் வலுப்படுவதோடு நல்லதொரு புரிந்துணர்வும் மேலோங்கும் என தெரிவிக்கப்பட்டது.மேலும் இரு நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு இச்சந்திப்பு பெரும் பங்காற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்,இச்சந்திப்பின் போது இருநாட்டின் ஜனநாயகம் குறித்தும் இருநாட்டின் நடவடிக்கள் மற்றும் வியூகம் குறித்தும் பேசப்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் மலேசியாவும் இந்தியாவும் பண்பாடு மற்றும் வரலாற்று ரீதியிலும் ஒற்றுமைகளை கொண்டிருப்பதாகவும் இவ்விரு நாட்டின் நட்புறவு காலத்திற்கு உகர்ந்தது என்றும் இச்சந்திப்பின் வழி தெரிவிக்கப்பட்டது.


Pengarang :