PBT

மதிப்பீட்டு வரியை விரைந்து செலுத்துவீர் – எம்பிஎஜே

அம்பாங் ஜெயா , மே 30:

வளாக உரிமையாளர்கள் அல்லது சொத்து உரிமையாளர் தத்தம் மதிப்பீட்டு வரியினை விரைந்து செலுத்துமாறு அம்பாங் நகராண்மைக் கழகம் (எம்பிஎஜே) கோரிக்கை விடுத்தது.எந்தவொரு மீதமும் இல்லாமல் வரியை செலுத்துவது விவேகமானது என்றும் அதனை உடனே செலுத்துமாறும் அதன் தலைவர் அப்துல் ஹமிட் உசாய்னி கேட்டுக் கொண்டார்.
இதில் வீடு,வியபார தலங்கள்,தொழிற்சாலைகள் மற்றும் காலி நிலங்களும் அடங்கும் என்றும் கூறிய அவர் அதற்கு சொந்தமானவர்கள் அல்லது உரிமையாளர்கள் மதிப்பீட்டு வரியை உடனடியே செலுத்துவது அவசியமாவதாகவும் கூறினார்.இவ்வாண்டில் இதுவரை 241,572 கட்டண நோட்டிஸ்கள் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அதன் மதிப்பு வெ.46.06 மில்லியன் என்றும் கூறிய அவர் இது முதல் காலாண்டு மற்று இரண்டாம் காலாண்டுக்கானது என்றும் குறிப்பிட்டார்.
மதிப்பீட்டு வரியை செலுத்தும் இறுதி நாள் ஆகஸ்டு 31 என்றும் கூறிய அவர் 51,287க்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும் அதன் மதிப்பு வெ.9.87 மில்லியன் என்றும் கூறினார்.மேலும்,மலிவு விலை வீட்டு உரிமையாளர்கள் மற்றும் கிராமத்தை சார்ந்தவர்களும் கடந்த 2015 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளின் மதிப்பீட்டு வரியையும் இன்னும் செலுத்தவில்லை என்றும் நினைவுறுத்தினார்,கடந்த 2016 முதல் 2018 வரையில் மட்டுமே விதிவிலக்கு இருப்பதாகவும் மற்றதை அனைவரும் கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையில்,எம்பிஎஜே நேரடியாக வரியை வசூலிக்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளதாக கூறிய அவர் வரியை செலுத்தாதவர்களுக்கு முறையாக நோட்டிஸ் “இ” வழங்கப்பட்டதோடு வாரண்டும் வெளியாக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் குறிப்பிட்ட சில பகுதிகளில் செலுத்தப்படாத வரியை வசூலிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.சம்மதப்பட்ட இடம் அல்லது தலம் காலியாக விடப்பட்டிருந்தாலும் அதன் உரிமையாளர் மதிப்பீடு வரியை செலுத்த வேண்டும் என்பதை நினைவுறுத்துவதாக அப்துல் ஹமிட் மேலும் கூறினார்.


Pengarang :