NATIONAL

முதலமைச்சர் அலுவலக சிறப்பு அதிகாரியாக பிரசாந்த் நியமனம்

மலாக்கா, மே 22:

முதலமைச்சர் அலுவலகத்தின் நேரடிப் பார்வையில், இயங்கும் இந்தியர்களுக்கான சமூக நல விவவாகரப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக பிரசாந்த் குமார் பிரகாசம் அதிகாரப் பூர்வமாக நியமனம் செய்யப்பட்டார்.

நேற்று நடந்த ஆட்சிக் குழு கூட்டத்திற்குப் பிறகு நிருபரை சந்தித்துப் பேசிய முதலமைச்சர் அட்லீ அசஹரி பிரசாந்த்தின் இப்பதவிக்கான நியமனத்தை
அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சட்டத்துறை கல்வி பெற்றிருக்கும் 24 வயதுடைய பிரசாந்த், கெ அடிலான் கட்சியில் இளைஞர் பிரிவில் மாநில செயலாளராகவும், பாக்காத்தான் ஹராப்பான் இளைஞர் பிரிவின் மாநில பொருளாலராகவும் பொறுப்பேற்று வருகிறார்.

“பிறப்பு ஆவணங்கள் பிரச்சினை, ஜாசின் லாலாங் தமிழ்ப் பள்ளி, லிட்டல் இந்தியா நுழைவாயில், ஈமச்சடங்கிற்கான நிலப்.பிரச்சினை, மற்றும் மக்கள் எதிர் நோக்கி வந்த சமூக நலப் பிரச்சினைகளுக்கு
எதிராகப்.போராடிய பிரசாந்துக்கு ஹிண்ட்ராப்பின் மக்கள்.எழுச்சியும், அன்வார் இப்ராஹிமின் மறுமலர்ச்சி எழுச்சியும் தாம் அரசியலில்.ஈடுபட உந்துதலாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

சிவப்பு அடையாள அட்டை, பிறப்பு ஆவணங்கள் பிரச்சினை, தமிழ்ப் பள்ளிகள் எதிர் நோக்கும் பிரச்சினை, வேலை.வாய்ப்புகள் போன்ற பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து , ஆட்சிக் குழு உறுப்பினர் ஜி.சுவாமிநாதனுடன் இனைந்து சமுதாயப்.பிரச்சினைக்கு முடிவுகள் எடுக்கப்படும் என்றார் பிரசாந்த்.

எதிர் கட்சியாக இருந்த போது
மாநிலத்தில் இந்தியர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்காகத் தீவிரமாகப் போராடிய முகங்களில் பிரசாந்தும் ஒருவர் என்பது குறிபிட்டத் தக்கது.

தகவல்: இரா.சரவண தீர்த்தா


Pengarang :