NATIONAL

அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ மொழி மலாய் மொழிதான் – வான் அஸிசா

சா ஆலாம்,ஜூன்29 :

அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ மொழி மலாய்மொழிதான் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மயில் தெளிவாக எடுத்துரைத்தார். அரசாங்கத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் நடவடிக்கைகளிலும் மலாய் மொழிதான் அதிகாரப்பூர்வ மொழி என்றும் உறுதிப்பட கூறினார்.

ஹராப்பான் கூட்டணி அரசாங்கம் மலாய் மொழியை புறக்கணிப்பதாக கூறப்படுவதை மறுத்த வான் அஸிசா மலாய் மொழிதான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ மொழி என்றும் அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை எனவும் கூறினார்.
மலாய் மொழியை அரசாங்கம் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுவது அர்த்தமற்றது என கூறிய வான் அஸிசா இனியும் அதே கருத்தினை முன் வைத்து உணர்ச்சியை தூண்டும் வகையிலான நடவடிக்கையில் யாரும் களமிறங்க வேண்டாம் என்றும் தெரிவித்தார்.மேலும்,மலாய் மொழி நாட்டின் தேசிய மொழி என்றும் அதுவே அதிகாரப்பூர்வ மொழி என்பதும் மலேசியர்கள் அனைவரும் அறிந்ததே என்றும் குறிப்பிட்டார்.

அன்மையில்,நிதியமைச்சர் லிம் குவான் எங் சீன மொழியை பயன்படுத்தியது தொடர்பில் கருத்துரைக்கும்படி கூறுகையில் வான் அஸிசா இவ்வாறு பதிலளித்தார்.மேலும்,இதுவொரு பெரிய விவகாரம் இல்லை என பிரதமர் குறிப்பிட்டதையும் சுட்டிக்காண்பித்த வான் அஸிசா இவ்விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.


Pengarang :