SUKANKINI

உலகக் கிண்ணம் 2018: இங்கிலாந்து அணியே மந்திரி பெசாரின் தேர்வு!!!

ஷா ஆலாம், ஜூன் 21:

உலகின் பார்வை ரஷ்யாவில் நடைபெறும் 2018-ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியை நோக்கி இருக்கும் வேளையில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரியும் இதற்கு விதிவிலக்கல்ல. தனது டிவிட்டரில் ‘ஹாஸ்தேக்’ இங்கிலாந்து என்று தனது அதிகாரப்பூர்வ சுங்கை துவா சட்ட மன்ற அட்டை படத்தில் பதிவு செய்துள்ளார்.

அமிரூடின் ஷாரிக்கு இது ஒன்றும் புதிதல்ல, அவர் ஏற்கனவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கால்பந்து ரசிகர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஏற்கனவே சிலாங்கூர் கால்பந்து அணியை 33-வது முறையாக மலேசிய கிண்ணத்தை வாகை சூடிய போது அணியின் நிர்வாகியாக இருந்தது அமிரூடின் ஷாரியின் கால்பந்து ஆர்வத்தை நிரூபித்துள்ளது.


Pengarang :