ANTARABANGSA

துன் மகாதீர்: 2020 தூரநோக்கு சிந்தனை 2025-இல் நோக்கத்தை அடையும்?

தோக்கியோ, ஜூன் 12:

‘2020 தூரநோக்கு சிந்தனை’ என்ற நாட்டின் சிறந்த அடைவு நிலையை எட்டும் எண்ணத்தை முன்பு  தோற்றுவித்த பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், இந்த லட்சியம் 2025 அல்லது அதற்கு முன்னர் நிறைவேறும் என்று கூறினார். 2020 தூரநோக்கு சிந்தனை, இதற்கு முன்பு இருந்த அரசாங்கம் பல குழப்பங்கள் நிறைந்த கொள்கைகளை நிறைவேற்றி நோக்கத்தை அடையவில்லை என்று துன் மகாதீர்  விவரித்தார்.

இன்னும் 2020 அடைய இரண்டு ஆண்டுகளே எஞ்சிய வேளையில் மலேசியா முன்னேறிய நாடு என்ற அந்தஸ்து மற்றும் உயர்ந்த வருமானம் பெறும் பட்டியலில் இடம்பெறும் என்ற நம்பிக்கையில் சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.

”  இரவு பகல் இடைவிடாது வேலை செய்தாலும், நாம் 2020 தொலைநோக்கு சிந்தனையை எட்ட முடியாது. இதற்கு இன்னும் சில காலங்கள் தேவைப்படும். சரியான கொள்கை மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் வேளையில் 2025-இல் இந்த லட்சியம் நிறைவேறும்,” என்று 24-வது ஆசியாவின் எதிர்காலம் அல்லது நிக்கேய் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

தகவல்: பெர்னாமா


Pengarang :