NATIONAL

நஜீப் வீட்டில் கைப்பற்றிய பொருட்களின் விபரங்கள்….

கோலா லம்பூர், ஜூன் 27:

கடந்த    மாதம்   முன்னாள்    பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்குடன்    தொடர்புள்ள   வீடுகளில்    நடத்தப்பட்ட     அதிரடித்    தாக்குதலில்    கைப்பற்றப்பட்ட   பொருள்கள்   பற்றிய    விவரங்களை   போலீசார்   இன்று    வெளியிட்டனர்.

கைப்பற்றப்பட்ட    அப்பொருள்களின்   மொத்த  மதிப்பு    ரிம686.37 மில்லியன்   என்று       கூட்டரசு    வணிகக்  குற்றவியல்    துறை   இயக்குனர்   போலீஸ்   ஆணையர்  அமர்   சிங்   தெரிவித்தார்.  ஆனால்,  அவற்றின்   இன்றைய   சந்தை  மதிப்பு  ரிம910 மில்லியனுக்கும்   ரிம1 பில்லியனுக்கும்  இடைப்பட்டிருக்கலாம்.

கைப்பற்றப்பட்ட   பொருள்களின்   விவரம்:

26   நாடுகளின்   பணத்தாள்கள்,  அவற்றின்  மதிப்பு  ரிம116 மில்லியன்
567  கைப்பைகள்,   அவற்றின்   மதிப்பு   ரிம51.3 மில்லியன்
423  கைக்கடிகாரங்கள்,     அவற்றின்    மதிப்பு   ரிம78 மில்லியன்
234  கருப்புக்கண்ணாடிகள்,  அவற்றின்   மதிப்பு   ரிம374,000
நகைகளின்  மதிப்பு   ரிம440மில்லியன்.


Pengarang :