NATIONAL

மேலும் சிலாங்கூர் எம்பிகள் அமைச்சர்களாக தேர்வு?

ஷா ஆலம், ஜூன் 21:

ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சாமாட் மத்திய அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற செய்தி தொடர்பில் விளக்கம் ஏதும் கொடுக்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார். அமைச்சர்களின் தேர்வு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களின் கையில் உள்ளது என்று சிலாங்கூர் இன்றுக்கு செய்தி கொடுத்தார்.

”  அமைச்சர்கள் பெயர் பட்டியல் துன் மகாதீர் முடிவு செய்வார். ஆகவே, இதை ஒட்டி கருத்து தெரிவிப்பது என்பது தவறான ஒன்று. தற்போதைய சூழ்நிலையில் பல மாற்றங்கள் நடந்துள்ளது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால், இந்த விடயத்தை பிரதமரிடம் விட்டு விடுகிறேன்,” என்று செய்தியாளர்களிடம் பேசினார்.

 

 

 

 


Pengarang :