SELANGOR

புதிய மந்திரி பெசார், சிலாங்கூர் மாநிலத்தை சிறந்த அடைவு நிலைக்கு கொண்டு செல்வார்!!!

சிலாங்கூர் மாநிலத்திற்கு புதிய மந்திரி பெசாராக பதவி ஏற்றிருக்கும் அமிரூடின் சஹாரி முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் மரபில் இம்மாநிலத்தை நன்முறையில் சிறந்த இலக்கை நோக்கி வழி நடத்துவார் என்பதில் துளியும் ஐயமில்லை.

அத்தகைய ஆற்றலும் விவேகமும் சிறந்த தூரநோக்குப் பார்வையையும் கொண்டிருக்கும் மந்திரி பெசார் அமிரூடின் சஹாரி சிலாங்கூர் மாநிலத்தை அடுத்தக்கட்ட முன்னேற்றமான இலக்கிற்கு கொண்டு செல்வார் என்பதில் சிலாங்கூர் வாழ் மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

சிலாங்கூர் மாநிலத்தின் வளர்ச்சியும் மேம்பாடும் சிறந்த இலக்கை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகளையும் திட்டங்களையும் செயல் வடிவத்தையும் மந்திரி பெசார் சிறந்த முறையில் கொண்டிருப்பதை அவரது விவேகமான செயல்பாடுகளிலிருந்து வெளிப்படையாகவே காண முடிகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாடு முதலீடுகளை கவர்வதில் அவரது தனித்துவம் சிறந்து விளங்கும் என்பதில் மாற்றுகருத்து இல்லாத போது அஃது இம்மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உன்னத பங்களிப்பினை செய்திடும் என்பது பெருமிதமானது.

மலேசியாவில் இருக்கும் மாநிலங்களில் சிலாங்கூர் மாநிலம் தனித்துவ சிறப்பு மிக்கது என்றால் மறுப்பதற்கில்லை.நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிடும் இம்மாநிலம் மக்கள் நலனிலும் நாட்டிற்கே முன்மாதிரியாக விளங்குகிறது.இந்நிலை மேலும் தொடர வேண்டும்.புதிய மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் மரபில் அதனை தொடர்ந்து நிலைத்திட செய்வார் என்பதில் துளியும் ஐயமில்லை.

சிலாங்கூர் மாநிலத்தின் ஐபிஆர் என சொல்லப்படும் அரசாங்கத்தின் பரிவு மிக்க திட்டங்கள் இன்றைய சூழலுக்கு ஏற்ப அடுத்தக்கட்ட இலக்கை எட்ட வேண்டும்.மாநில வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மக்களின் நலனுக்கு உகர்ந்த காலத்திற்கு ஏற்ற திட்டங்களும் சிந்தனை உருவாக்கங்களும் அவசியமாகும் நிலையில் மந்திரி பெசார் இதில் தனித்துவ அக்கறையும் கவனமும் கொள்வார் என்பதை நம்மால் நன்கு உணர முடிகிறது.

நாட்டின் “விவேகமான மாநிலம்” எனும் பெருமிதம் கொண்ட சிலாங்கூர் மாநிலம் புதிய மந்திரி பெசாரின் தலைமையில் அதீத வளர்ச்சியையும் மேம்பாட்டையும் எட்டும் என்பதில் ஒவ்வொரு சிலாங்கூர் வாழ் மக்களும் பெரும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.அதேவேளையில்,ஸ்மார்ட் சிலாங்கூர் திட்டங்களும் தொடரும் நிலையில் அஃது மக்களின் வாழ்வாதாரத்தையும் வளர்ச்சியையும் உன்னத நிலைக்கு உயர்த்தும் என்பதை மக்கள் நன்கு புரிந்துள்ளனர்.

நாட்டின் 14வது பொதுத் தேர்தல் தேசிய அளவில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது.இதற்கு மக்களின் அரசியல் சிந்தனையும் விவேகமும்தான் பெரும் காரணம்.இதில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பங்களிப்பும் செயல்பாடும் மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியதையும் நாம் மறுத்திடலாகாது.

தொடர்ந்து இந்நாட்டு மக்களின் நம்பிக்கையான மாநிலமாக சிலாங்கூர் மாநிலம் திகழவும் அதேவேளையில் சிறந்த வளர்ச்சியும் மேம்பாடும் மிக்க மாநிலமாக சிலாங்கூர் மாநிலம் விளங்கிட அரசாங்கத்தின் ஒவ்வொரு திட்டத்திற்கும் செயல்பாட்டிற்கும் மக்களாகிய நாம் கரம்கோர்த்து செயல்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் மாநிலத்தை டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் மரபில் சிறந்த இலக்கிற்கு கொண்டு செல்ல ஆவணம் கொண்டிருக்கும் புதிய மந்திரி பெசார் அமிரூடின் சஹாரிக்கும் மாநில அரசாங்கத்திற்கும் சிலாங்கூர் வாழ் மக்கள் அனைவரும் தொடர்ந்து ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிட வேண்டும் என சிலாங்கூர் இன்று கேட்டுக் கொள்கிறது.

புதிய நம்பிக்கை – புதிய மலேசியா!!

நன்றி.
கு.குணசேகரன்.

(ஆசிரியர் சிலாங்கூர் இன்று)


Pengarang :