SELANGOR

மந்திரி பெசார்: 2019-இன் வரவு செலவு திட்டத்தை வரைய சட்ட மன்ற உறுப்பினர்கள் மக்களுடன் களம் இறங்க வேண்டும்

போர்ட் கிள்ளான், ஜூலை 15:

சிலாங்கூர் மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் மக்களுடன் களம் இறங்கி பல்வேறு பரிந்துரைகளை மற்றும் ஆலோசனைகள் கேட்டறிந்து எதிர் வரும் 2019-இன் வரவு செலவுத் திட்டத்தை வரைய உறுதுணையாக இருக்க வேண்டும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி  வலியுறுத்தினார். இதன் மூலம் ஒரு தலைசிறந்த வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்ய முடியும் என்பது மட்டுமில்லாமல் எந்த ஒரு தரப்பினரும் புறக்கணிக்கப் படாமல் இருக்கும் என்று விவரித்தார்.

” கடந்த 14-வது பொதுத் தேர்தலில்  நாம் மிகப்பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்தோம். சிலாங்கூர் மாநிலத்தை சிறந்த  முன்னேற்றம் அடைந்த மாநிலமாக திகழ அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களும் பாடுபட வேண்டும் என்று நினைவுறுத்துகிறேன். இது நமது கடமையாகும். ஆகவே, ஆகஸ்ட் தொடங்கி அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களும் மக்களுடன் களம் இறங்க வேண்டும். மக்களின் குறைகளை கேட்கவும், பரிந்துரைகளை கேட்டறிந்து சிறந்த ஒரு வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்ய உதவ வேண்டும்,” என்று போர்ட் கிள்ளான் சட்ட மன்ற நோன்பு பெருநாள் திறந்த இல்ல விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் பேசினார்.

 

 

 

 

 


Pengarang :