PBT

எம்டிகெஎல், சட்டவிரோத தொழிற்சாலைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் 12 அந்நிய தொழிலாளர்களை கைது செய்தது !!!

பந்திங், ஆகஸ்ட் 7:

கோலா லங்காட் மாவட்ட மன்றம் (எம்டிகெஎல் ) கடந்த ஆகஸ்ட் 2-இல் எட்டு சட்ட விரோத பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் மீது அதிரடி நடவடிக்கையில் 12 அந்நிய நாட்டு தொழிலாளர்களை கைது செய்தது. ஸ்ரீ சீடிங் மற்றும் தெலுக் பங்லீமா காராங் பகுதிகளில் நடத்தப்பட்ட நடவடிக்கையில் பல்வேறு அரசாங்க இலாகாகளின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். எம்டிகெஎல்-இன் தலைவர் முகமட் ஜைன் ஏ ஹாமிட் கூறுகையில், அனைத்து அந்நிய நாட்டு தொழிலாளர்களும் குடிநுழைவு இலாகாவினரால் கைது செய்யப்பட்டனர் என்று விவரித்தார்.

” மேற்கண்ட நடவடிக்கை சட்ட விரோத தொழிற்சாலைகள் இலாபத்திற்காக பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு இடையூறாக இருக்கும் நிலையில் எடுக்கப் பட்டது. எம்டிகெஎல் சார்பாக, ஒருங்கிணைந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்து அரசாங்க இலாகாகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.


Pengarang :