NATIONAL

சலாவுதீன்: மலேசியாவிற்கு விவசாய பல்கலைக் கழகம் தேவை!!!

செர்டாங், ஆகஸ்ட் 7:

விவசாயத்துறையில் திறன்மிக்க பட்டதாரிகளை உருவாக்க மலேசிய நாட்டிற்கு விவசாயப் பல்கலைக்கழகம் ஒன்று தேவை என்று விவசாயம் மற்றும் விவசாய அடிப்படை தொழில் அமைச்சர் டத்தோ சலாவுதீன் அயோப் கூறினார்.

புதிய விவசாயப் பல்கலைக்கழகத்தை உருவாக்கவோ அல்லது மலேசியா புத்ரா பல்கலைக் கழகத்தை ஆரம்ப காலத்தில் இருந்ததை போன்று விவசாய அடிப்படை கல்வியில் உருமாற்றம் செய்ய ஆலோசனைகள் மேற்கொண்டு வருவதாக கூறினார்.

இந்த விவசாய அடிப்படையிலான பல்கலைக் கழகம், தாய்லாந்து நாட்டில் அமைந்துள்ள  சோலோலங்கோன் பல்கலைக் கழகம் மற்றும் சியாங்மாய் பல்கலைக் கழகம் ஆகியவை போன்று விவசாயத்துறையில் திறன்மிக்க மற்றும் புதிய தொழில்நுட்பம் கொண்ட பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கில் செயல்படும் என்று சலாவுதீன் விவரித்தார்.

ஆனாலும், இந்த நடவடிக்கை விவசாய அமைச்சு மற்றும் மலேசிய புத்ரா பல்கலைக் கழகத்துடன் கலந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கல்வி அமைச்சுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

தகவல்: பெர்னாமா


Pengarang :