NATIONAL

சுதந்திரம்: சிறந்த எதிர்காலம், என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டு !!!

கோலா லம்பூர், ஆகஸ்ட் 30:

நாடு 61-வது சுதந்திர தினத்தை நாளை கொண்டாடும் வேளையில், பல்வேறு இனம், வயது கொண்டவர்கள் அனைவரும் மலேசிய நாட்டின் குடிமக்களாக இருப்பதை எண்ணி பெருமிதம் கொள்வதாகவும் மற்றும் நாட்டிற்கு சிறந்த எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

அனைத்துலக மலேசியா இஸ்லாமிய பல்கலைக் கழகம் (யுஐஏம்) நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. 95% மக்கள் மலேசிய குடிமக்களாக இருப்பதை எண்ணி பெருமை கொள்கிறார்கள்.

 

 

 

 

நாட்டின் எதிர்காலத்தை பற்றி கேட்டறிந்த போது 80%-க்கு மேல் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்றும் இந்த நிலைமை 2017-இல் 70%-ஆக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

” ஆனாலும், இந்த ஆய்வில் நடுத்தர வயதினர் (36-50) மற்றும் இளையோர் (21-35) மிக அதிகமான நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த இரண்டு வர்க்கத்தினரும் புதிய மலேசிய அரசாங்கம் சிறந்த எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் என்று நம்புகிறார்கள்,” என்று யுஐஏம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது என்று பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல்: பெர்னாமா


Pengarang :