NATIONAL

மலேசியாவின் இராணுவ ஆற்றலை மீட்டெடுக்க வேண்டும்!!

கோலாலம்பூர் – தென்கிழக்காசியாவில் மலேசியாவின் இராணுவ ஆற்றலும் பலமும் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதாக நாட்டின் தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு தெரிவித்தார்.வியட்நாம் மற்றிம் இந்தோனேசிய நாடுகளோடு ஒப்பிடுகையில் நாம் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதாகவும் கூறிய அவர் நாட்டின் இராணுவ ஆற்றலையும் பலத்தையும் மீட்டெடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
கடந்த 70ஆம் ஆண்டுகளில் நாட்டின் இராணுவம் மிகவும் பலம் பொருந்திய நிலையில் இருந்ததை சுட்டிகாண்பித்து பேசிய அவர் நடப்பில் அந்நிலை இல்லை என்றார்.அதனை மீட்டெடுக்க அரசாங்கம் பல்வேறு நிலைகளில் செயல்பட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
தரை,கடல் மற்றும் வான் நிலையில் நமது இராணுவத்தின் ஆற்றலும் பலமும் மிகவும் பின் நோக்கிய நிலையில் இருப்பதாக கூறிய தற்காப்பு அமைச்சர் இதனை அனைத்துலக நிலையில் தரம் மதிப்பீடு செய்கையில் மிகவும் வேதனைக்குரியதாக அஃது அமைந்திருப்பதாகவும் கூறினார்.இந்நிலையில்,நாட்டின் இராணுவத்தை மீண்டும் தென்கிழக்காசியாவில் பலம் பொருந்திய இராணுவமாகவும் ஆற்றலும் திறனும் மேன்மைக் கொண்ட இராணுவமாகவும் உருவெடுக்க அமைச்சு தனித்துவ கவனமும் செயல்பாட்டையும் கொண்டிருப்பதாக கூறினார்.
அதனை முன்னெடுப்பதில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளையும் கருத்தியல் சிந்தனைகளையும் ஆராய்ந்து வருவதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டேனியல் பாலகோபால் அப்துல்லா இராணுவம் மற்றும் அதற்கான மானிய ஒதுக்கீடு குறித்து எழுப்பிய கேள்விக்கு முகமட் சாபு இவ்வாறு பதிலளித்தார்.
மேலும்,மானிய ஒதுக்கீடு குறித்து பேசுகையில் நடப்பில் ஒதுக்கப்படும் மானியம் போதுமானதாக இல்லை என்றும் அவர் ஒப்புக் கொண்டார்.இரானுவத்திற்கு ஒதுக்கப்படும் மானியம் வெறும் வெ.1.2 பில்லியன் மட்டுமே எனவும் கூறிய அவர் கோரிக்கை வைக்கப்பட்ட மானியத்தில் அஃது வெறும் 62 விழுகாடு மட்டுமே என்றும் அவர் கூறினார்.
இருப்பினும்,நடப்பில் நாட்டின் இராணுவத்தின் நிலையை பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் சிறந்த நிலைக்கு கொண்டு வருவதே அமைச்சின் தனித்துவமான செயல்பாடாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.


Pengarang :