NATIONAL

43.5% எஸ்.எஸ்.டி வரி மட்டுமே விதிக்கப்படுகிறது !!

புத்ராஜெயா – வரும் செப்டம்பர் மாதம் அரசாங்ம் அமல்படுத்தப்படவிருக்கும் எஸ்.எஸ்.டி எனப்படும் விற்பனை சேவை வரி வெறும் 43.5 விழுகாட்டை மட்டுமே கொண்டிருக்கும் என நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.தேசிய முன்னணி இதற்கு முன்னர் விதித்த ஜி.எஸ்.டி வரியோடு ஒப்பிடுகையில் இஃது பெரும் அளவில் குறைவானது என்றும் அவர் கூறினார்.
முந்தைய அரசாங்கம் விதித்த ஜி.எஸ்.டி பயன்பாடு 64.8 விழுகாடு என்பதையும் சுட்டிக்காண்பித்த லிம் குவான் எங் எஸ்.எஸ்.டி வரி நாட்டின் 1975ஆம் ஆண்டி வரி சேவை விதிக்கு உட்பட்டிருக்கும் என்றும் அஃது துளியும் 2014ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி சார்ந்து இருக்காது என்றும் நினைவுறுத்தினார்.
இருப்பினும்,இந்த வரி விவகாரத்தில் பல்வேறு மேம்பாடுகளையும் ஆக்கப்பூர்வமான திட்டமிடல்களையும் வரையறுக்க வேண்டியுள்ளதாகவும் கூறிய லிம் குவான் எங் மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் சுமையை ஏற்படுத்தும் வகையில் அஃது இல்லாமல் இருப்பதை உறுதி செ
செய்வதோடு நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் வழி செய்யும் வகையிலும் அஃது அமைந்திருக்கும் என்றார்.
முந்தைய தேசிய முன்னணி ஆட்சியில் விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி மக்களுக்கு பெரும் சுமையாகவும் அழுத்தத்தையும் ஏற்படுத்தியதையும் அவர் நினைவுக்கூர்ந்தார்.ஆனால்,எஸ்.எஸ்.டி வரியை பொறுத்தமட்டில் அஃது மக்களின் நலனில் தனித்துவ கவனம் செலுத்தியுள்ளது என்றார்.மேலும்,குறிப்பிட்ட சில துறைகளுக்கு வரிவிலக்கும் புதிய யுக்தியும் கையாளப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
குறிப்பாக கட்டுமானப் பணிகள் சார்ந்த பொருட்களுக்கு எஸ்.எஸ்.டி வரி விலக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் உணவுகளுக்கு ஆண்டுக்கு அவர்களின் லாபம் 1மில்லியனை எட்டினால்தான் வரி செலுத்த வேண்டும் என்றும் புதிய நடைமுறையையும் மத்திய அரசு கொண்டிருப்பதையும் குறிப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்,எஸ்.எஸ்.டி வரியில் எந்தவொரு மந்த நிலையும் அல்லது அவசியமற்ற போக்கும் கடைபிடிக்கப்படாது.அவற்றில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மட்டுமே உயிர்க்கொள்ளும் என்றும் கூறிய அவர் வரி சார்ந்த விடயங்களில் இருக்கும் குறைகள் களையப்படும் என்றும் கூறினார்.எஸ்.எஸ்.டி நேர்மையாகவும்,நேர்த்தியாகவும் அதேவேளையில் விவேகமாகவும் கையாளப்படும் என்றார்.
எஸ்.எஸ்.டி வரியின் மூலம் ஹோட்டல்,உணவகம்,சுற்றுலாத்துறை போன்றவற்றின் வளர்ச்சியும் மேம்பாடும் புதியதொரு இலக்கை நோக்கி கொண்டு செல்லவும் முடியும் என நம்பிக்கை தெரிவித்த நிதி அமைச்சர் காப்புறுதி துறை மற்றும் அனைத்து நிலையிலான வர்த்தகங்களின் மேம்பாட்டிற்கும் எஸ்.எஸ்.டி வரி பெரும் பங்காற்றும் என்றும் குறிப்பிட்டார்.
அதேவேளையில்,சூதாட்டம்,விமான போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்று 6 விழுகாடு வரி விதித்தல் குறித்தும் குறிப்பிட்ட லிம் குவான் எங் எஸ்.ஏஸ்.டி வரி மக்களின் சுமையை குறைப்பதில் தனித்துவமான பங்கை அளிக்கும் என்றார்.மேலும்,எஸ்.எஸ்.டி மூலம் பெறப்படும் பணம் மீண்டும் மக்களின் நலனுக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படும் என்றும் லிம் குவான் எங் தெரிவித்தார்.


Pengarang :